சனி, 12 மார்ச், 2011

ஜப்பானில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக இரு‌ப்பதாக மத்திய அயலுறவு‌த்துறை அமைச்சகம் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது. ஜப்பானில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எனவே, அவர்களுடைய நிலைமை குறித்து இந்தியாவில் உள்ள உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொட‌‌ர்பாக மத்திய அயலுயுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பானில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். கன்டோ, கன்சாய் பகுதிகளில் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். அங்கு சேதம் நிகழ்ந்ததாக எந்த வித தகவலும் வரவில்லை.
டோக்கியோ, ஓசாகா நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாக இந்தியர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். 
அவர்களின் நிலைமை கவனிக்கப்பட்டு வருகிறது.

ஜப்பானில் உள்ள இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக தகவல்களை பெறலாம். மையத்தின் தொலைபேசி எண்கள்: 00813-32622391 முதல் 97 வரை எ‌ன்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக