புதன், 13 ஏப்ரல், 2011

அமைதியாக நடந்த தமிழக தேர்தல்: 75.2 % வாக்கு பதிவு

இன்று தமிழகம் முழுவதும் சராசரியாக 75.2 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். 
மின்னணு எந்திரங்கள் கோளாறால் பல இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியதோடு, சில இடங்களில் ஓட்டுப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.மின்னணு எந்திரங்கள் கோளாறான வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக