ஞாயிறு, 1 மே, 2011
துபாயில் 15 இலட்சம் போதை மாத்திரை பிடிப்பட்டது
ஒரு ஆசியா நாட்டிலிருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரை குவியல் துபாய் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. 35 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 863 கிலோ எடையுள்ள 15 லட்சம் போதை மாத்திரைகள் பொது வியாபரத்திற்கு வழங்கப்படும் லைசன்ஸ் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டதாக ஏர்கார்கோ சீனியர் மானேஜர் உமர் அஹ்மத் அல் முஹிரி கூறினார். பிடிக்கப்பட்ட மாத்திரைகளின் மாதிரிகளை உடல் நல அமைச்சகத்திற்கு அனுப்பி போதை மாத்திரை என்பது உறுதி செய்யப்பட்டது.
தடை செய்யபட்ட போதை மாத்திரை வகைகளில் இந்த மாத்திரை முதல் நிலையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
0 comments:
கருத்துரையிடுக