ஞாயிறு, 1 மே, 2011

ஏர் இந்தியா விமானிகளின் ஸ்டிரைக் இன்று 5-வது நாள்

ஏர் இந்தியா விமானிகளின் ஸ்டிரைக் இன்று 5-வது நாளை எட்டியுள்ளது. இதனால் வழக்கமாக இயக்கப்படும் 165 சேவைகளுக்கு பதிலாக 40 விமானங்கள் மட்டுமே இன்று இயக்கப்பட்டன.நாடு முழுவதும் 40 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சில இடங்களில் ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 737 போயிங் விமாங்களை பயன்படுத்தப்பட்டு வருவதாக ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். தில்லியில் இருந்து காத்மாண்டு, துபைக்கு தலா ஒரு விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தில்லியில் இருந்து வழக்கமாக 52 விமானங்ள் இயக்கப்படும். ஏர் இந்தியா நிர்வாகமும், விமானிகளும் தங்கள் நிலையில் இருந்து இறங்கிவர மறுப்பதால் முட்டுக்கட்டை தொடர்ந்து நீடித்துவருகிறது. ஏர் இந்தியா நிர்வாகத்திடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமானிகள் தெரிவித்தனர். இந்திய வர்த்தக விமானிகள் சங்கத் தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்புக்காக மற்றொரு தரப்பினர் காத்திருக்கின்றனர். இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தின் 800-க்கும் மேற்பட்ட விமானிகள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக