திங்கள், 2 மே, 2011

உஸாமா பி‌ன் லாதன் கொல்லப்பட்டார்: அமெ‌ரி‌க்கா அ‌றி‌வி‌ப்பு

அ‌ல்-க‌ய்தா தலைவ‌ர் உஸாமா பி‌ன் லாதன் அமெரிக்காவால் தேடுதல் கு‌ற்றவா‌ளிக‌‌ள் பட்டியலில் முதல் இடத்தில் இரு‌ந்து வ‌ந்தா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான உஸாமா பி‌ன் லாதன் அமெரிக்கா படைகள் எடுத்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் அடோபாபாத் என்னுமிடத்தில் கொல்லப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்க செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி பி.பி.சி இவ்வாறுஅறிவித்துள்ளது. அமெரிக்காவின் தேடுதலின்போது, பின்லேடனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் பின்னர் அவரது உடல் அடோபாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிராம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடல் மட்டத்தில்  உஸாமா பி‌ன் லாதனின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக உடல் பத்திரிகையாளர்களிடம் காட்டப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக