வெள்ளி, 20 மே, 2011
ஈராக்கில் குண்டு வெடிப்பு 27 பேர் பலி
ஈராக்கில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 27 பேர் உயிர் இழந்தனர். அதில் பெரும்பாலோர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கில் கிருக் நகரில் உள்ள காவல் தலைமை அலுவலகத்தில் இன்று காலை திடிரென இருமுறை குண்டு வெடித்தது. இதில் காவல் அதிகாரிகள் 17 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். போலிஸ் தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தபட்டிருந்த பல கார்கள் குண்டு வெடிப்பின் போது தூக்கி வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

0 comments:
கருத்துரையிடுக