வெள்ளி, 20 மே, 2011

கேரளாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 28 கிலோ அரிசி

கேரளாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு இம்மாதம் ஒரு கிலோ ரூபாய் 2 விகிதத்தில் 28 கிலோ அரிசியும், 7 கிலோ கோதுமையும் வழங்கப்படும் என்று சிவில் சப்ளைஸ் இயக்குனர் அறிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேசன் கார்டுகளுக்கு இந்த மாதம் கிலோ அரிசி 2 ரூபாயில் 28 கிலோ அரிசியும் , அவர்களுக்கு கிலோ ரூபாய் 2 விலையில் கோதுமையும் கிடைக்கும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள ரேஷன் தாரர்கர்களுக்கு கிலோ 8 .90 விலையில் 10 கிலோ வரை அரிசி வழங்கப்படும் மற்றும் கிலோ 6 .40 ௦ விலையில் 2 கிலோ கோதுமை வரை வழங்கப்படும் என குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக