சனி, 7 மே, 2011

பிளஸ் 2 ரிசல்ட்


பிளஸ் 2 தேர்வு முடிவிகள் 9 ஆம் தேதி வெளியாகிறது அதே நாள் மாணவர்கள் தாங்கள்  படித்த பள்ளிகளில் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுக்கான இயக்கம் தெரிவித்துள்ளது  . பிளஸ் 2 தேர்வு  மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 25 தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் 5477  பள்ளிகள் மூலம் 723545 மாணவ மாணவிகள் தனித்தேர்வர்கள் 57000 பேர் எழுதின. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள்    குறித்த விவரம் அந்தந்த பள்ளிகளில்  காலை 10 மணிக்குள்  ஒட்டப்படும்.
மதிப்பெண்  பட்டியல்கள் 25 ஆம் தேதியில் அந்தனந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பாடங்களில் விரும்பிய பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு எந்த ஒரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணபிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதே பாடத்திற்கு மறுகூட்டல் கேட்டு தற்போது விண்ணப்பிக்க வேண்டியதில்லை. 
விடைத்தாள் நகல் பெற்ற பிறகு விரும்பினால் மறுக்கூட்டளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு  இயக்குனர் வசுந்துரா தேவி அறிவித்துள்ளார்.  

0 comments:

கருத்துரையிடுக