சனி, 7 மே, 2011

குழந்தையின் வயிற்றில் கொண்டை ஊசி


திருப்பத்தூர் அருகே உள்ள கதவனி கிராமத்தை சேர்ந்தவர் ராம் குமார் இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு சுதா என்னும் மனைவியும் ஷியாம் என்ற 2    வயது மகனும் உள்ளனர். ஷியாம் கடந்த 1 வாரமாய் வயிட்ற்று வலி,வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்பட்டுள்ளான்.. மேலும் வலது கால் தாங்கி தாங்கி நடக்க ஆரம்பித்துள்ளான். குழந்தை படும் அவஸ்த்தையை பார்த்து சுதா குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி  சென்றார். 

மருத்துவர்கள் குழந்தையை சென்னைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டார். எழும்பூர் அரசு குழந்தை மருத்துவமனைக்கு சுதா குழந்தை  ஷியாமுடன்  சென்றார். குழந்தையை சி.டி ஸ்கேனில் குழந்தையின் அடிவயிற்றில் நீளமான ஊசிப்போல் கம்பி ஒன்று இருப்பது தெரியவந்தது. குழந்தை ஷியாம்  உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு  செய்தனர். அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் செந்தில் நாதன், உதவி பேராசிரியர் சங்கரபாரதி, டாக்டர் பூர்ணிமா மயக்க டாக்டர் சீனிவாசன், ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ளே இருந்த 3  அங்குல கொண்டை ஊசியை எடுத்தனர். குழந்தை விளையாடும் பொது ஹர்பின்னை  வாயில் வைத்து பல்லால் கடித்துள்ளது ஒரு பாதி உடைந்து வாய் வழியால் வயிற்றுக்கு சென்றிருக்கலாம். அது சிறு குடலை ஓட்டை  போட்டு கொண்டு அடி வயிற்றில் போய்  தங்கி விட்டது. 
கிட்னிக்கும் இதயத்திற்கும் செலும் இரத்த குழாய் அருகில் சென்று விட்டது. அடிவயிற்றில் தங்கியதால் பின்னில் உள்ள இரண்டு முனைகளில் உள்ள பகுதிகளில் சீல் பிடித்து வீங்கி விட்டது. சுமார் 1 மணிநேரம் அறுவை சிக்ச்சை செய்து பின்னை எடுத்தோம். ஹேர் பின்னை எடுக்காமல் இருந்தால் உடல் முழுவதும் சீல் பரவி கிட்னிக்கு சென்றால் கிட்னியை எடுக்க நேரிருக்கும் அதேபோல் இரத்தகுழாய் வழியாக சீல் இருதயத்திற்கு சென்றிருந்தால்  உயிருக்கே   ஆபத்தாக இருந்திருக்கும்  இவ்வாறு டாக்டர் செந்தில் நாதன் கூறினார்.  

0 comments:

கருத்துரையிடுக