சனி, 21 மே, 2011
குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் 5 லட்சம் குடும்பங்களுக்கு 11 ஆயிரம் டன் இலவச அரிசி கலெக்டர் ராஜேந்திரரத்னு தலைமையில் ஆலோசனை கூட்டம்
குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 10,783 டன் இலவச ரேஷன் அரிசி வழங்கப்பட உள்ளது. இலவச அரிசி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடந்தது. வருகிற 1ந் தேதி முதல் தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்கள் தற்போது பெற்று வரும் அளவுப்படி, அதே அளவு அரிசி தொடர்ந்து மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும்.
அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 லட்சத்து 15 ஆயிரத்து 714 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10,783 மெட்ரிக் டன் அரிசி மாதந்தோறும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த அரிசியை மாதத்தின் எல்லா வேலை நாட்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அதிகாரி பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சிவமலர், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் நாகராஜன், மண்டல மேலாளர் தமிழ்மணி, துணைமேலாளர் முருகேசன், வட்ட வழங்கல் அலுவலர்கள் மேரிபாய், வசந்தராஜன், ஆறுமுகநயினார், ஜெயந்தி கிறிஸ்டோபெல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக