வெள்ளி, 6 மே, 2011
அருணாச்சலபிரதேச முதலமைச்சர் தோர்ஜீ காண்டு மரணம்
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த அருணாச்சலபிரதேச முதலமைச்சர் தோர்ஜீ காண்டு வின் (வயது 56) உடல் இட்டநகருக்கு கொண்டுவரப்பட்டது. விபத்து நடந்த கோய்லயிலிருந்து தவாங்கு வழி ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் கொண்டு வரப்பட்ட உடல் இன்று (௦05-05-2011) மாலை தலைநகரம் வந்து சேர்ந்தது. உடலடக்கம் குறித்து நாளை முடிவு செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். உயிரிழந்த முதல்வர் தோர்ஜீ காண்டு, அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 6வது முதல்வரான இவர் 2 வது முறையாக முதல்வர் பதவியை வகித்து வந்தார். ஹெலிகாப்டரில் சமீபத்தில் உயிரிழந்த இரண்டாவது காங்கிரஸ் முதலமைச்சர் ஆவார் இவர்.
0 comments:
கருத்துரையிடுக