வியாழன், 5 மே, 2011

நாகர்கோவில் ஏடியம்மில் கொள்ளை முயற்சி

நாகர்கோவில் இருந்த ஏடியம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் ஒன்று அங்கிருந்த காவலாளிகளை கொலை செய்து தப்பினர். நாகர்கோவிலை அடுத்த ராமநாதிச்சன்புதூரில் லார்ஜெகநாத் என்ஞ்சினியரிங் கல்லூரியில் நுழைவாயில் உள்ள சிட்டி யூனியன் பாங்க ஏடியம் உள்ளது .கல்லுரி காவலாளிகலான சுடலை முத்தும் பால் பாண்டியும் ஆகிய இருவரும் பாதுகாத்து வந்தனர் அவர்களுக்கு என தனி அறையும் உள்ளது . இந்நிலையில் நேற்று இரவு கல்லுரி காவல் பணியில் இருவரும் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . இன்று அதிகாலை மாணவர்கள் இரண்டுபேர் செய்தித்தாளை வாங்க காவலர் அறைக்கு சென்றனர் அங்கு அறை முழுவதும் இரத்த வெள்ளத்தில் தலை நசுங்கப்பட்டு சுடலை முத்து சிதறி பிணமாக கிடந்தார் .

இன்னொரு காவலாளியான பால்பாண்டி கல்லூரிக்கு அருகே தலை நசுங்கப்பட்டு பிணமாக கிடந்தார் . ஏடியம் மையம் முற்றிலும் உடைக்கப்பட்டிருந்தது பணம் இருந்த பகுதியை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை .ஊருக்கு வெளியே இருப்பத்தினால் நடப்பது யாருக்கும் தெரியாது என மர்ம நபர்கள் நினைத்திருக்கலாம் எனவும் அதனால் கொள்ளையடிக்க வந்திருக்கலாம் எனவும் அந்த முயற்சி நடக்காததால் கல்லுரி காவலாளிகளை கொலை செய்திருக்கலாம் எனவும் ஏடியம் மையத்தில் வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக