வெள்ளி, 6 மே, 2011
ஹமாஸ்-ஃபதஹ் போராட்ட இயக்கங்களுக்கு இடையே சமாதான ஒப்பந்தம்: ஓமான் அரசு வரவேற்பு
பாலஸ்தீனில் ஹமாஸ் மற்றும் ஃபதஹ் இஸ்லாமிய போராட்ட இயக்கங்களுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் அவர்களுகிடையே இருந்த கருத்து வேறுபாடு களையப்படுவதுடன் அவர்கள் போராட்ட சம்மந்தமான விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்படவுமுள்ளனர். இதனை ஒமான் அரசு வரவேற்றுள்ளது. இதற்கு முயற்சி செய்த எகிப்து நாட்டிற்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளது. ஜெருசலத்தை தலைமையிடமாக கொண்ட நாட்டை உருவாக்குவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய இடம் வகிக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக