வெள்ளி, 6 மே, 2011
அனந்தபுரி ரயில் இரணியலில் நிரந்தரமாக நின்று செல்ல கோரிக்கை
இரணியல் ரயில் நிலையத்தில் அனந்தபுரி ரயில் நிரந்தரமாக நின்றுசெல்லும் வகையில் இந்த ரயில் நிலையத்தை பயணிகள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ரயில்வே பயனாளிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கச் செயலர் பி. எட்வர்ஜெனி வெளியிட்ட அறிக்கை: திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி ரயில் இப்போதுவரை இரணியல் ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக நின்று செல்கிறது. அது நிரந்தரமாக நின்றுசெல்ல வேண்டுமெனில் இரணியல் ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்த வேண்டும்.
இந்த ரயிலில் சென்னை செல்லும் பயணிகள் இரணியல் ரயில் நிலையத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் பயணிக்க வேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது புறப்படும் அல்லது சேரும் இடம் இரணியல் என முன்பதிவு செய்ய வேண்டும். இரணியல் ரயில் நிலையத்திலிருந்து பயணிக்க வசதி இல்லாத பட்சத்தில் நாகர்கோவிலிலிருந்து இந்த ரயிலில் ஏற அல்லது இறங்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்வோர் சென்னையிலிருந்து டிக்கெட் எடுக்கும்போது டிக்கெட் கவுன்ட்டரில் சென்னை-இரணியல் என டிக்கெட் எடுக்க வேண்டும். இம் மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களில் வசிப்போர் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது டிக்கெட்டில் புறப்படும் அல்லது சேரும் இடம் இரணியல் என முன்பதிவு செய்ய வேண்டும்.
ரயில்வே நிர்வாகமும் அனந்தபுரி ரயிலை நிரந்தரமாக இரணியல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்
0 comments:
கருத்துரையிடுக