புதன், 8 ஜூன், 2011

சென்னையிலிருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து 23 பேர் கருகி பலி

தனியாருக்கு சொந்தமான குளிர் சாதனம் மற்றும் படுக்கை வசதி உள்ள இந்த கே.பி.எண் பேருந்து நேற்று இரவு சென்னையிலிருந்து திருப்பூர் சென்றிருக்கும் போது வேலூர் மாவட்ட காவேரி பாகம் என்ற அடுத்து உள்ள அவலூர் என்ற இடத்தில் லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது திடிரென தீ பிடித்து பேருந்து எரிந்தது.பேருந்தில் பயணம் செய்த 23 பயணிகள் தீயில் கருகி பலியாகினர். 23 பயணிகளும் அடையாளம் தெரியாத அளவு எரிந்து விட்டன. 
இந்நிலையில் இன்று காலை கூடிய சட்ட பேரவையில் செல்வி ஜெயலலித்தா நடந்த இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்தார் மற்றும் இறந்து போன குடும்பத்துக்கு ரூபாய் 1 லட்சம் பணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ௦ ஆயிரம் பணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடந்த இந்த விபத்து தமிழகத்திலே மிக பெரியது என கருதப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக