திங்கள், 6 ஜூன், 2011

இனி சமையல் சிலிண்டர் பதிவு செய்ய எஸ்.எம்.எஸ் போதும்

இனி பாரத் கேஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களின் சமையல் சிலிண்டர் வேண்டி எஸ்.எம்.எஸ் செய்தால் போதும் வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என பாரத் பெற்றோலியம் நிறுவனத்தின் கோவை மேலாளர் தங்கவேல் தெரிவித்தார் இதை பற்றி கோவை மேலாளர் தங்கவேல் கூறியதாவது வாடிக்கையாளர்கள் இனி தங்களுக்கு சமையல் சிலிண்டர் வேண்டி தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் 57333 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பினால் போதும் உங்களுடைய சமையல் சிலண்டர் பதிவாகிவிடும் மற்றும் பதிவுசெய்யபட்ட விவரங்கள் மீண்டும் உங்கள் என்னிற்கே எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்படும்.
வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற்றுக்கொள்ள தங்களின் கைபேசி என்னை பாரத் கேஸ் இணயத்தளம் மூலமாகவோ அல்லது ஏஜென்சிகள் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்றும், பதிவு செய்யப்பட வாடிகையாலர்களுக்கு கொடுக்கப்பட்ட என்களை கொண்டு மூப்பு அடிப்படையில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் மற்றும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் நேரம் ,நாள் மற்றும் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட நேரம், நாள் ஆகியவை தெரிந்துகொள்ளலாம் என்றும், இந்த சேவை மூலம் சிலிண்டர்கள் சந்தையில் விர்க்கபடுவதையும் தவிர்க்கலாம் என்றும், புதிய இணைப்பு கேட்பவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்கப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் பில்லில் குறிப்பிட்ட தொகையை மட்டும் கொடுத்தால் போதும் கூடுதலாக கொடுக்க வேண்டாம் என்றும்,கோவையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய குறைகளையோ அல்லது பதிவு செய்வது பற்றிய விவரங்களை தெரிந்து கொளுவதர்க்கு 04222534336 என்ற என்னை தொடர்பு கொண்டால் போதும் அவர்களுடைய குறைகள் தீர்க்கப்படும் என்றும் பாரத் பெற்றோலியம் நிறுவனத்தின் மேலாளர் தங்கவேல் தெரிவித்தார். 

0 comments:

கருத்துரையிடுக