செவ்வாய், 7 ஜூன், 2011

சட்டசபையில் சமச்சீர் கல்வித் திருத்த சட்ட மசோதா தாக்கல்.

தமிழக சட்டசபையில் சமச்சீர் கல்வித் திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதாலும், தரமில்லாமல் இருப்பதாலும் அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கூடிய தமிழக சட்டசபையில், சமச்சீர்வி கல்வித் திட்ட திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
சட்டமேலவை ரத்து தீர்மானம்

அதேபோல சட்ட மேலவையை ரத்து செய்வதற்கான தீர்மானமும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 200 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக