ஞாயிறு, 26 ஜூன், 2011
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மகன் முஸ்லிம்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார்
இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நதன்யஹூ. இவரது மகன் யாயிற் நதன்யஹூ.இவர் 19 வயதுடைய ராணுவ செய்தி தொடர்பாளார். இவர் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார். மரணத்தையும், துவேஷத்தையும் கொண்டாடுபவர்கள் முஸ்லிம்கள் என்றும், தீவிரவாதத்திற்கு ஒரு மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் தான் என்றும், பாலஸ்தீனம் ஒரு போது தனி நாடாக முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். யாயிற் இந்த அவதூறு கருத்துக்களை வெளியிட்டுயிருப்பது பெறும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் இந்த அவதூறு கருத்தக்களை குறித்து பாலஸ்தீனியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் யாயிற் இதுபோன்ற இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி அவதூறான கருத்துக்களை வெளிப்படுத்துவது முதல் முறை அல்ல என்றும் இதுபோன்று ஏற்க்கனவே பேஸ் புக்கில் 23 நபர்களை கொண்டு ஒரு குருப் ஆரம்பித்து அதில் யாயிற் அரபு தொழில்களையும்,பொருள்களையும் யூதர்கள் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் இந்த கருத்தை பேஸ் புகில் வெளியான அடுத்த 2 மணி நேரத்தில் பேஸ் புக் நீக்கி விட்டதாகவும் தெரிகிறது.
மேலும் இதனை பற்றி அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் இது ஒரு இளைஞனின் கோபத்தால் வெளியானது என்றும் இருந்தாலும் இது தற்போது நீக்கப்பட்டது என்றும் வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.மேலும் இந்த அவதூறை பற்றி யாயிற் பெற்றோர்களான பிர்ரதமர் பெஞ்சமின் நதன்யஹூ மற்றும் அவரின் மனைவி தரப்பில் கூறுகையில் அவர்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மீது நன்பிக்கை கொண்டவர்கள் என்றும், மத பாரபட்ச்சம் இல்லாமல் அனைவரையும் மதிப்பார்கள் என்றும், தங்கள் பிள்ளைகளையும் அதே போன்று தான் வளர்த்து வருகிறோம் என்றும்,யாயிற் எதோ கோபத்தில்தான் இந்த கருத்தை வெளிப்படுத்திருக்க கூடும் ஆனால் இந்த கருத்து நீக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
தந்தையின் போதனையைதான் இப்போது மகன் வெளிப்படுத்தியுள்ளான், இதன் மூலமே தெரிகிறது பிரதமரான பெஞ்சமின் நதயன்ஹூ தன் குடும்பத்தை எவ்வாறு வளர்த்து வருகிறர் என்று யாயிரையும் அவரின் தந்தை பெஞ்சமினையும் கடுமையாக சாட்டியுள்ளார் பாலஸ்தீன செய்தி தொடர்பாலாரான ஹூசம். மேலும் ஏற்க்கனவே யாயின் இந்த கருத்துக்களை பற்றி இஸ்ரேல் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், யாயிரின் தவறுகளை ராணுவ தளபதிகள் சுட்டி காட்டியுள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ராணுவ வீரர் ஈடுபடக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிகிறது.
மேலும் பிரதமர் பெஞ்சமின் நத்யன்ஹூ கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பிரதமாராக் இருந்ததாகவும் தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் பிரதமர்ரனார் என்றும்,ஆரம்ப காலத்தில் பிரதமர் பாலஸ்தீன தனி நாட்டை ஆதரித்து வந்ததாகவும் ஆனால் தற்ப்போது பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளை முடக்கி வைத்துள்ளதாகவும்,இந்த நிலையில் தான் அவரது மகன் யாயிற் இதன் போன்ற சர்ச்சையில் ஈடுப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக