ஞாயிறு, 26 ஜூன், 2011
"ஹீனா ரப்பானி" பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்ப்பட்டது. அப்பொழுது வெளியுறவு துறை மந்திரியாக இருந்த ஷா மொகமத் குரேஷி என்பவர் நீக்கப்பட்டார். பின்னர் வெளியுறவு அமைச்சரான ஹீனா ரப்பானி என்ற 34 வயதுடைய இவர் தான் அந்த பொறுப்புகளை கவனித்து வந்திருக்கிறார்.மேலும் இவர் அரசியல் குடுபத்தின் பாரம்பரியத்தை சேர்ந்தவராகவும் இருக்கிறார். இந்நிலையில் இவரையே அந்த துரையின் கேபினெட் அமைச்சராக அமைக்க முடிவு செய்யைப்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சராக ஹீனா ரப்பானி நியமிக்கப்படவுள்ளார்.
இவரது தந்தை மூத்த அரசியல்வாதியான மாலிக் குலாம் நூற் ரப்பானி கற் என்பது குறிபிடத்தக்கது .மேலும் ஹீனா ரப்பானி முன்னாள் அதிபர் முஷரப் காலத்தில் முஸ்லிம் லீக் கியூ கட்ச்சியின் உறுப்பினராக இருந்த இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கட்ச்சியில் சேர்ந்துள்ளார். தேர்தல் போட்டியிட்டு வெற்றியும் பெற்ற ஹீனா ரப்பானி தற்போது விரைவில் வெளியுறவு துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். மேலு இவர் அடுத்த மாதம் டெல்லியில் நடக்க உள்ள இந்தியா பாகிஸ்தான் இடையிள்ளான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்தியா வர உள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக