புதன், 29 ஜூன், 2011

இலவச லேப்டாப் வழங்க பட்டியல் தயாரிப்பு

வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பிளஸ் 1 ,பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ மானவிக்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளார்.இதை செயல்படுத்தும் விதமாக இந்த ஆண்டு முதல் கட்டமாக 9 லட்ச்சத்து 12 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக லேப்டாப் தயாரிக்கும் பல நிருவனங்கள் மாதிரி லேப்டாப் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு லேப்டாப் வடிவமைத்து அடுத்த மாத இறுதிக்குள் செயப்பட்டு தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிடும்.
 மேலும் ஒவ்வரு மாவட்டத்திற்கும் எவ்வளவு லேப்டாப் தேவை என பட்டியல் தரும்மாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது. இதேப்போல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் வழங்குவதற்கான பட்டியல் தரும்மாறு உத்தரவு விடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுவதால் இதுவரை பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கான பட்டியல்கள் தயாராகவில்லை.பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கும் அனுப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக