வியாழன், 30 ஜூன், 2011

சென்னையிலிருந்து உப்பு என்ற பேரில் வெடி பொருள் கடத்தல்

அந்தமானில் சென்னையிலிருந்து கப்பல் மூலம் ஒரு கண்டைனர் அனுப்பப்பட்டது. அந்தமானை சேர்ந்த அதிகாரிகள் கண்டைனரை சோதித்ததில் அதில் வெடி மருந்து இருப்பது தெரிய வந்தது.மேலும் அந்த கண்டைனர் மேலே உப்பு என்று தவறாக குறிப்பிட்டு இருப்பது தெரியவந்தது.கண்டைனரில் உள்ள வெடி பொருள்களை அதிகாரிகள் கணகெடுத்து பார்த்த போது அதில் 60ஆயிரம் டெட்டனேட்டர்கள், 300 ஜெலட்டின் குச்சிகள், 10 ஆயிரம் கிலோ அமோனியா நைட்ரேட் வெடிபொருள் இருந்தது. 
உப்பு என்ற பேரில் வெடி பொருகள் கடத்தப்பட்டதை அறிந்த அந்தமான் அதிகாரிகள் உடனடியாக சென்னைக்கு சென்று அங்கு உள்ள அதிகாரிகளை விசாரித்துள்ளனர். விசாரணையின் போது சிவகங்கையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் இந்த வெடி பொருளை அனுப்பி வைத்தது தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் சிவகங்கையை சேர்ந்த அப்பாஸை உடனடியாக கைது செய்தனர். கைது செய்த அப்பாஸை சென்னை மற்றும் வேலூரில் அந்தமான் போலீசாரும், கியூ பிரிவினையை சேர்ந்த போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக