வெள்ளி, 1 ஜூலை, 2011

சேலம் அருகே ரெயில்- பள்ளி வேன், கார் மோதல்; 3 பேர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ளது வைகுந்தம். இதன் அருகே ரெயில்பாதை உள்ளது. இந்த வழியே இன்று பகல் 12.15 மணி அளவில் ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் வருவதால் ரெயில் கேட் மூடப்பட்டது. அப்போது அந்த வழியே வைகுந்தத்தில் இருந்து மாருதி ஆம்னி வேன் வந்தது. இதில் 6 பேர் இருந்தனர். ரெயில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த தனியார் பள்ளி வேன் வந்தது. வேகமாக வந்த இந்த வேனை உடனே நிறுத்த டிரைவர் பிரேக் போட்டார். ஆனால் வேன் நிற்கவில்லை. வேன் கட்டுப்பாட்டை இழந்து ஓடி மாருதி ஆம்னி வேன் மீது டமார் என மோதியது.
இதனால் ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ரெயில்வே கேட்டை உடைத்துகொண்டு ரெயில் முன் பாய்ந்தது. இதனால் ஆம்னி வேனும், பள்ளி வேனும் தூக்கி வீசப்பட்டு இந்த வாகனத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர், இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினார்.

ரெயில் மோதியதால் பள்ளி வேனில் வந்த இரண்டு டிரைவர்களும், மாருதி ஆம்னி வேனில் வந்த ஒருவரும் உடல் துண்டாகி துடிதுடித்து அதே இடத்தில் இறந்தனர். மாருதி ஆம்னி வேனில் வந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்களை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தை அறிந்த சங்ககிரி துணை சூப்பிரெண்டு ராமசாமி மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்து வருகிறார்கள். சேலம் அருகே நடந்த இந்த ரெயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்தை அறிந்த தமிழக ரெயில்வே டி.ஐ,ஜி.பொன்மாணிக்கவேல் விபத்தை கேள்விப்பட்டு மீட்பு பணியை வேகப்படுத்தி உத்தரவிட்டார்.

0 comments:

கருத்துரையிடுக