வியாழன், 16 ஜூன், 2011

அதிக நேரம் டி.வி பார்ப்பது ஆபத்து

அமெரிக்காவில் உள்ள ஹார்ட்வர்டு ஸ்க்குல் ஆஃப் பப்பிளிக் ஹெல்த் நடத்திய மருத்துவ ஆராயிச்சியில் அதிக நேரம் டி.வி பார்த்தால் விரைவில் மரணம் என தெரிவித்துள்ளது. மனிதர்கள் 2 அல்லது 3 மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி பார்த்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய்,உடல் பருமன், இருதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஏற்படும் என இந்த அராயிச்சியில் தெரிவித்துள்ளது. இந்த ஹார்ட்வேர் ஸ்கூல் ஆஃப் பபிளிக் ஹெல்த் நடத்திய மருத்துவ ஆராயிச்சின் நோக்கம் மனிதர்களுக்கு உடல் உழைப்பை அதிகபடுத்த சொல்வது மட்டுமில்லாமல் டி.வி பார்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் ஏற்ப்படும் தீமைகளை எடுத்து சொல்வதும்தான். 
மேலும் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் இன்று 2011 வரை இந்த ஹார்வேடு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய டி.வி தொடர்பான ஆராய்ச்சி முடிவுக்கு வந்ததாகவும், மேலும் எல்லாவற்றிளும் முன்னிலையில் வகிக்கும் அமெரிக்கர்கள் தினமும் 5 மணி நேரம் டி.வி பார்ப்பதிலும் முன்னிலையில் இருக்கிறார்கள் என்றும் ஐரோப்பியர்கள் தினமும் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை டி.வி பார்ப்பதில் முன்னிலையில் இருக்கிறாகள் என்று மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்கள் பிராங்க் ஹீ மற்றும் கிராண்ட் வெட் ஆகியோர் தெரிவித்தார்கள் .

0 comments:

கருத்துரையிடுக