திங்கள், 18 ஜூலை, 2011
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூபாய் 11 ஆயிரத்து 250 கோடி
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூபாய் 11 ஆயிரத்து 250 கோடி இருப்பதாக சுவிஸ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்க்கனவே சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூபாய் 20 லட்சம் கோடி முதல் 50 லட்சம் கோடி வரை இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சுவிஸ் தேசிய வங்கிகளின் தலைவர் வால்ட்டர் மேயர் கூறுகையில் எங்கள் நாட்டு வங்கிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு ரூபாய் 13 ஆயிரத்து 500 கோடியாக இருந்த இந்தியர்களின் பணம் கடந்த 2009 ஆம் ஆண்டு ரூபாய் 12 ஆயிரத்து 150 கோடியாக இருந்தது, மேலும் இந்த ஆண்டு புள்ளி விபரம் படி தங்கள் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 250 கோடி மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக