வெள்ளி, 1 ஜூலை, 2011

வெளிநாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் பாதியாக குறைப்பு - பி.எஸ்.என்.எல்.

மொபைல் நம்பரை மாற்றாமலேயே பிற மொபைல் சேவை நிறுவனங்களுக்கு மாறும் வசதி தமிழ்நாட்டில் 20-1-2011 முதல் அறிமுகப்படுத்தப்பட் டது. அன்று முதல் 29-6-2011 வரை குமரி மாவட்டத்தில் 2602 வாடிக்கையாளர்கள் பிற மொபைல் சேவை நிறவனங்களிலிருந்து பி.எஸ்.என்.எல்.க்கு மாறியுள்ளனர். இதே போல் பிற மாவட்டங்களிலும் அதிகப்படியான பிற மொபைல் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்.க்கு மாறி வருகிறார்கள். இவ்வகையில் நாகர்கோவில் தொலை தொடர்பு மாவட்டம் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் முதன்மை இடத்தில் உள்ளது.
ரூ.300ம் அதற்கு மேலும் மதிப்புள்ள யூனிவர்சல் ஐ.டி.சி. கார்டுகள் பயன்படுத்தி செய்யப்படும் வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஹாங்காங்க், தாய்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளுக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.1.80க்கும், பாகிஸ்தான், பிரான்ஸ், ஸ்வீடன், பஹரின் ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு ரூ.6க்கும் பேசலாம். இத்தகவலை பி.எஸ்.என்.எல். நாகர்கோவில் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக