வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
ஜன் லோக்பால் நிறைவேறாது: அத்வானி
அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவில் குறைபாடுகள் உள்ளதால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேறாது என்று பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். டெல்லியில் இன்று தம்மை நேரில் சந்தித்த ஐஐடி மாணவர்கள் குழுவிடம் அத்வானி இதனைக் கூறியுள்ளார். ஜன்லோக்பால் மசோதாவில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அதை தற்போதைய வடிவிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கடினம். ஜன்லோக்பால் மசோதா விதிமுறைகளில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இதை ஹசாரே குழுவிடம் நேற்று விளக்க முயன்றேன் என அத்வானி அந்த மாணவர்களிடம் மேலும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்துனியா
0 comments:
கருத்துரையிடுக