சனி, 24 செப்டம்பர், 2011

சென்னைக்கு கடத்த முயன்ற ரூ. 34 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுக வழியாக சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வெளிநாட்டு சிகரெட் கடத்தப் படுவதாக தூத்துக்குடி சுங்கத் துறைமுக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவல் படி தூத்துக்குடி சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் திடிரென துறைமுகத்தில் சோதனை மேற்கொண்டனர். சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது சிங்கப்பூரில் இருந்து சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனதிற்கு 660 பெட்டிகள் வந்திருந்தது.
அந்த பெடிகள்ளுடைய ஆவணங்களை சோதனையிட்டப்போது அதில் பிஸ்கட்டுகள் இருபதாக குரிபிடப்பட்டிருன்தது. சந்தேகமடைந்த புயலனாயிவு அதிகாரிகள் கண்டேனரை திறந்து சோதனை மேற்க்கொடனர். அப்பொழுது கண்டைனரில் இருந்த முதல் 630 பெட்டிகளில் பிஸ்கட்டும் மற்ற 30 பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் அதாவது இந்தோனேசியா சிகரெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சிகரேட்டுடைய மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.  துறைமுகங்களில் சுங்கவரியாக சிங்கப்பூரில் இருந்து கண்டைனரில் வந்த 1.83 லட்சம்  பிஸ்கட்டுகளுக்கு ரூ.84 ஆயிரம் சுங்கவரியாக செலுத்த வேண்டும். ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு சுங்கவரியாக ரூ. 14 லட்சம் வரை செலுத்த வேண்டி இருக்கும். ஆகையால் சுங்க வரியை குறைப்பதற்காக  இவ்வாறு பிஸ்கட் பெட்டிகளுடன் சிகரெட் பெட்டிகள் கடத்தப்பட்டது என கருதப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து தூத்துக்குடி துறைமுக வழியாக சென்னைக்கு கடத்த முயன்ற ரூ. 34 லட்சம் மதிப்புள்ள இந்தோனேசியா சிகரெட்டுகளை போலீசார்கள் பறிமுதல் செய்து மேலும் இந்த கடத்தலை குறித்து சென்னையை சேர்ந்த நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா. காம்.  

0 comments:

கருத்துரையிடுக