வியாழன், 22 செப்டம்பர், 2011
49 போலி டாக்டர்கள் கைது
சமீபகாலமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவாலூர் ஆகிய மாவட்டங்களில் போலி டாட்க்டர்கள் அதிகமாக புழங்கி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்து நான்கு மாவட்ட போலீசார்கள் சேர்ந்து திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,திருவலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் திடிரென சோதனையில் ஈடுப்பட்டனர்.
போலீசார்கள் நடத்திய திடீர் சோதனையில் 49 போலி டாட்க்டர்கள் சிக்கினர். சிக்கிய 49 போலி டாட்க்டர்கள் அனைவரும் 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,வேலூர் மற்றும் திருவலூர் ஆகிய இந்த நான்கு மாவட்டங்களில் சிக்கிய போலி டாக்டர்கள் 49 பேர் அனைவருமே கைது செய்யப்பட்டனர். போலி டாட்க்டர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.மேலும் போலி டாட்க்டார் தேடுதல் வேட்டை தொடரும் என காவல் துறையினரும் அறிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக