சனி, 24 செப்டம்பர், 2011

அமெரிக்காவின் புதிய திட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்காவில் பற்றாக்குறையை குறைக்கவும் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்கவும் அமெரிக்க டாலர் 3.6 டிர்லியன் மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தில் வரி உயர்வு உள்ளிட்டவை சேர்ந்தது என்பதால் கடும் எதிர்ப்பை தெரிவித்தது எதிர்கட்சியான குடியரசு கட்சி. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 9 ஆம் தேதி 447 பில்லியன் டாலர் செலவில் வேலைவாயிப்பு திட்டம் மட்டுமின்றி வரி சீர்திருத்தத்தை குறிப்பிட்டு காங்கரசுக்கும் அனுப்பப்பட்டது.
இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது குடியரசு கட்சி. மேலும் இந்த திட்டங்களை குறித்து ஒபாமா கூறுகையில் அடுத்த 10 ஆண்டுகளில் டாலர் 2.1 ட்ரில்லியன் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் இதனால் நாட்டின் பற்றாக்குறை குறையும் என்றும், நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் சம்பாத்திப்பவர்குக்கு அதிக அளவில் வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும்,  மில்லியனர் மற்றும் ப்ரில்லியங்களைத் தவிர நடுத்தரவாசிகள் அதிக அளவில் வரி செலுத்த தேவை இல்லை என்றும், 65 வயதான முதியவர்களுக்கு நலவாய்வுத் காப்பீடுத் திட்டமான மெடிகேர் திட்டம் மற்றும் குறைந்த வருமான கொண்ட குடும்பத்தினருக்கு நலவாய்வு காப்பீடுத்  திட்டமான மெடிகேயிடு ஆகிய திட்டங்களில் 580 ௦ பில்லியன் டாலர் குறைத்து வரி உயர்வு மூலம் 1.5 டிரில்லியன் டாலர் வருமானத்தை குறிப்பிட்டு, மேலும் எவ்வித வரி உயர்வையும் விதிக்காமல் மெடிகேர் போன்ற நலத் திட்டங்களை குறித்து செலவுகளை குறைக்கும் மசோதா எதிர்கட்சியால் கொண்டு வரப்பட்டால் அதனை தான் வீட்டோ மூலம் நிராகரிக்க போவதாகவும், மேலும் ஒபாமா ஏற்க்கனவே தான் அறிவித்த வேலைவாயிப்பு திட்டத்தை சட்டமாக்கும்படி, மேலும் இரண்டாவது திட்டத்தை விரைவில் இரு கடிச்சி உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பப்படும் என்றும், நவம்பர் 23 ஆம் தேதிக்குள் 12 பேர் கொண்ட இக்குழு புதிய செலவு குறைப்பு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றும், வரி சீர்திருத்தம் மற்றும் வரி உயர்வு மூலம் 1.5 ட்ரில்லியன் டாலர் வருமானமாக கிடைக்கும் என்றும், மெடிகேர் மற்றும் மெடிகேயிடு ஆகிய திட்டங்களில் மூலம் 580 ௦ பில்லியன் டாலர் மருத்துவமனை நிதியில் குறைக்கப்படும் என்றும், 1.1 ட்ரில்லியன் டாலர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை பெறுவதன் மூலம் சேமிக்கப்படும் என்றும் அமெரிக்க தலைவர் ஒபாமா தெரிவித்தார்.நன்றி தினக்குரல்.காம்

0 comments:

கருத்துரையிடுக