ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பூகம்பத்தால் 5 கிராமங்கள் அடியோடு அழிந்தன

கடந்த ஞாயற்று கிழமை அன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்  அளவுகோலில்  6.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்  இடிந்துவிழுந்தன.கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய ஏராளமானோர் உயிர் இழந்தனர் ஏராளமானோர் காயமடைந்தன. மேலும் கட்டிட இடிப்பாட்டில் சிக்கியவர்கள் மீட்க்கும் பணியில்  ராணுவம் ஈடுப்பட்டது. இந்த பூகம்பத்தால் இதுவரை 140 க்கும் மேற்ப்பட்டோர் உயிர் இழந்தார்கள்.
உயிரிழந்தவர்கள் அனைவருமே சிக்கிம், பீகார்,மேற்குவங்கம்.ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் நிவாரணமாக 30 முதல் 40 ௦ கிலோ வரை உணவு பொருட்களும், மருந்து பொருட்களும் ராணுவத்தினர் வழங்கினார்கள். இந்த நிலநடுக்கத்தால் சாலைகளில் பெரும் பெரும் பாறைகள் சரிந்து கிடப்பதால் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர்கள் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் இடுப்பட்டனர். அப்பொழுது வடக்கு சிக்கிமில் உள்ள லின்ஜியா,சக்யாங், டெண்டாங், டே, மற்றும் தோலாங் ஆகிய 5 கிராமங்களில் சென்று தேடும் போது ஒருவர் கூட இல்லாமல் அடியோடு அழிந்ததை கண்டனர். இதனால்  இந்த 5 கிராம பகுதிகளில் மட்டும் உயிர் சேதம் அதிகம் ஏற்ப்பட்டு இருக்கும்  என கருதப்படுகிறது. சிக்கிமில் உள்ள  சங்தாங்கில்  பெரிய நீர்மின் நிலையம் அமைப்பதற்காக கால்வாய் பணியில் ஈடுப்பட்டிருந்த 40 உழியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. நன்றி தினக்கரன் .காம்.


0 comments:

கருத்துரையிடுக