திங்கள், 26 செப்டம்பர், 2011

பொது மக்களுக்கு எச்சரிக்கை


தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா பொது மக்களை முன் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவருமே வண்டிகளிலோ, பேருந்துகளிலோ, பொது இடங்களிலோ ,வாகனங்களிலோ சந்தேகபடியான நபர்களோ கண்டால் அல்லது கேட்பாரற்று பொது இடங்களில் கிடக்கும் பொருட்களை கண்டாலோ அதை போது மக்கள் எடுப்பது, கையாள்வது,போன்றவைகளை தவிர்த்து   பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க  வேண்டும் என்றும், மேலும் கல்வி நிறுவனங்களில் பயிலும் தங்களுடைய மாணவர்களுக்கு இதனை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கற்று கொடுக்க வேண்டும் என்றும், மேலும் இன்டர்நெட் கஃபே க்கு வருகை தருவோர்களின் சரியான அடையாள ஆவணங்கள் போன்றவற்றை நன்கு சரிபார்த்து அனுமதிக்க வேண்டும் என்றும் , சந்தேகபடியான நபர்கள் வந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும், இதேபோல் கைபேசி எங்களுக்கான  சேவையை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கின் அடையாள ஆவணங்கள் போன்றவைகளையும் சரியாக சரி பார்த்து வழங்க வேண்டும் என்றும்,  அலுவலக வளாகங்கள், உணவு விடுதிகள்,திரையருங்கள்,தங்கும் விடுதிகள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்களின் அடையாள ஆவணங்கள் நன்றாக சரிபார்த்து பின்னரே அவர்களை பணியில் நியமித்து தங்க இடமளிக்க வேண்டும் என்றும், மேலும் அவ்விடங்களில் போதுமான பாதுகாப்புடன் கண்காணிப்பு கேமராக்கல் பொருத்தப்பட வேண்டும்  என்றும்,  இது போன்ற இடங்களில் பணிபுரியும் நபர்கள் மீதோ அல்லது அவர்களின் நடவடிக்கைகளிலோ சந்தேகம் ஏற்ப்பட்டால் அவர்களை குறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும், ஜெயலிலதா பொதுமக்களுக்கு அளித்த செய்திகுறிப்பில் தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு அவர்களுடைய அவசர தகவல்களை அளிக்க காவல் துறை தொலைபேசி என் ஆனா 100 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சரான செல்வி ஜெயலலித்தா தெரிவித்தார். நன்றி தினபூமி.  

0 comments:

கருத்துரையிடுக