ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வருகிறது புதிய திட்டங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்களில் வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சத்துக்கு மேற்ப்பட்ட மாணவர்கள்  படித்து வருகின்றன. மாணவர் விசாவில் படிக்கும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் வருகை தந்தவுடன் ஆங்காகங்கே தங்கி பெட்ரோல் பங்க, ஹோட்டல் போன்ற இடங்களில் பகுதி நேரமாக வேலை பார்த்து நள்ளிரவில் திரும்பும் போது தங்களுடைய பணத்தை கொள்ளையர்கள் பறிப்பதும் போன்றவை கடந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டது.
மேலும்  ஆஸ்திரேலியாவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்ததாலும் மற்றும் ஆஸ்திரேலியா அரசின் விசா கெடுபிடியாலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்து விட்டது. மேலும் ஆஸ்திரேலியாவில் படிக்க வரும் மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்ப்பதை தவிர்க்கும் வகையில் ஆஸ்திரேலியா  படிக்க வரும் மாணவர்கள் தங்கள் வங்கி இருப்பில் ரூபாய் 18 லட்சம் வைத்திருக்க வேண்டும் அப்பொழுதான் விசா வழங்கப்படும் என புதிய திட்டத்தை ஏற்ப்படித்தியது. இந்த புதிய திட்டத்தின் மூலம் வசதியில்லாதவர்கள் ஆஸ்திரேலியா செல்ல இயலாது என்றும் இவ்வாறான விசா கெடுபிடிகளை தளர்த்தும்படி பல்கலைகழகங்கள் கேட்டுக்கொண்ட பிறகு மாணவர்கள் தங்கள் வங்கி கணக்கில் கணிசமான தொகையை வைத்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அந்நாட்டு அரசு தளர்த்தியது.  மேலும் தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு படிப்பதர்க்காக் கூடுதலாக தங்குவதற்கு ன்வசதிகளையும் ஏற்ப்படுத்தியுள்ளது என்றும், மேலும் ஆஸ்திரேலியா வரும் மாணவர்கள் தாங்கள் வந்தது வேலை பார்ப்பதற்காக இல்லை படிப்பதற்காகத் தான் என்பதை நிருபிக்க வேண்டும் என்று நியு சவுத் வேல்ஸ் முன்னாள் அமைச்சர் மைகேல் நைட் குறிபிட்டார். நன்றி தினமலர் .காம்.


0 comments:

கருத்துரையிடுக