திங்கள், 26 செப்டம்பர், 2011

விமான விபத்தில் திருச்சியை சேர்ந்த 8 பேர் பலி


இமயமலை தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுல்லா பயணிகள் விமானம் மூலம் சென்று எவரெஸ்ட் மலையை சுற்றி பார்ப்பது வழக்கம். இமயமலை சிகரங்கள் போன்றவற்றை சுற்றி  கான்பிபதர்க்காக விமான சேவையை பல்வேறு நிறுவனங்கள் சுற்றுல்லா  பயணிகளுக்கு அழித்துள்ளது. இதுபோல் திருச்சி புத்தூர் சேர்ந்த ஏர் விமான போக்குவரத்து நிருவனம் பயன்படுத்திய பீச்கிராட் 1900D என்ற ரக விமானம் ஒன்று எவரெஸ்ட் மலையை சுற்றுல்லா பயணிகளுக்கு சுற்றி காண்பித்து திருப்பும் போது ஒரு சிறிய மலை மீது மோதி கிழே விழுந்து நொறுங்கியது.
இந்த விமான விபத்தால் இந்தியர்கள், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் மொத்தம் 19 பேர் பலியானார்கள். மேலும் இந்த விமானத்தில் இருந்த சுற்றுல்லா பயனிகள் பெரும்பாளானோர்கள் இந்தியர்கள் என்றும் அதில் உயிர் இழந்த திருச்சியை  சேர்ந்த  8 பேர்கள் என தெரியவந்தது. இந்த 8 பேரும் திருச்சி கட்டுமான சங்கத்தின் உறுப்பினர்கள். இவர்கள் அனைவருமே சங்கத்தின் தேசிய உயர்மட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள புது தில்லி  சென்றிருகிரார்கள் அங்கு கூடத்தில் கலந்து கொண்டு அங்கிருந்து சுற்றுல்லாவுக்காக  நேபாளத்திற்கு சென்றிருகிரார்கள்.மேலும் உயிர் இழந்த திருச்சியை சேர்ந்த இந்த 8 நபரின் உடல்கள் நேபாலத்துள்ள ஒரு மருத்துவமனையில் உள்ள பிணவறை கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அதனை இறந்தவர்களில் உறவினர்கள் வந்து அடையாளம் கண்டு கொண்டுவருவதர்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நன்றி பிபிசி தமிழ் .   

0 comments:

கருத்துரையிடுக