செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கேரளாவில் பள்ளி வாகனம் ஆற்றில் கவிந்தது

திருவனந்தபுரம் அருகே உள்ள கலக்குட்டா என்ற பகுதில் ஜோதி நிலையம் என்ற பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் அப்பள்ளியிலிருந்து 12 வயதுக்கு குட்பட்டவர்களுடன் 30 பேர் கொண்ட பள்ளி வேன் ஒன்று புறப்பட்டது. பள்ளியில் இருந்து புறப்பட்ட வேன் சனம்க்ரா என்ற பகுதியில் உள்ள ஆற்றை கடக்கும் போது பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் உள்ள படகின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது.
அதிலிருந்த 30 குழந்தைகளும் பள்ளி வேனுடன் ஆற்றில் மூழ்கின. இதனைக் கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள் குழந்தைகளை காப்பாற்ற ஆற்றினுள் இறங்கி குழந்தைகளை மீட்டனர். பெரும்பாளான குழந்தைகள் மீட்கப்பட்டனர். அதில் 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தனர். மேலு 11 குழந்தைகள் எஸ்.ஏ.டி மருத்துவமனையிலும், 8 குழந்தைகள் மிஷன் மருத்துவமனையிலும்  சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகளை ஆற்றில் தேடி வருகின்றன. ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்வதால் குழந்தைகள் தொலைந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  ஆற்றில் கவிழ்ந்த பள்ளி வேணும் மீட்க்கப்பட்டன. வேன் கட்டுபாட்டை இழந்ததால்தான் ஆற்றில் கவிழ்ந்தது என பள்ளி வேன் ஓட்டுனர் போலீசாரிடம் தெரிவித்தார். நன்றி தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா. இன். 

0 comments:

கருத்துரையிடுக