வியாழன், 15 செப்டம்பர், 2011

அரக்கோணம் அருகே பயங்கர ரயில் விபத்து

நேற்று முன்தினம் இரவு சரியாக 9 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செலும் பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது, அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட ரயில் சித்தேரி ரயில் நிலையத்தின் வெளியே சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும் போது சற்று நேரத்திலே சென்னை கடற்கரையிலயுருந்து வேலூர் கண்டோன்மென்ட் செலும் பயணிகள் ரயில் முன்னாடி சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட ரயில் மீது மோதியது. பின்புறமாக மோதியதால் சென்னை ரயில்ன் எஞ்சின் மற்றும் அதை தொடர்ந்த பெட்டிகளும் நொறுங்கி கிழே விழுந்தது. அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட ரயிலின் மீது மோதியதில் ரயிலின் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது. பயங்கரமாக நடந்த இந்த ரயில் விபத்தின் சத்தம் கேட்ட அருகே உள்ள சித்தேரி,அண்ணா நகர், குப்பின்பெட்டை பகுதியில் உள்ள மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டன. இந்த கொடூர ரயில் விபத்தால் இரண்டு ரயிலில் பயணம் செய்தவர்களில் 11 பேர் உயிர் இழந்தனர் 500 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தன, இந்த விபத்தால் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களையும் நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்ட ரயில் தாமதமாக புறப்பட்டது தான் இந்த ரயில் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்து நடந்த சில நேரம் வரையில் அங்கு போலிஸ் அதிகாரிகளோ ,ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளோ,தீயனைப்பு துறையினரோ வரவில்லை என்பது குறிபிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக