புதன், 28 செப்டம்பர், 2011

அறிமுகமாகிறது ட்ரீம்ளைனர் விமானம்


விமான தயாரிப்பில் உலக புகழ் பெற்ற போயிங் ட்ரீம்ளைனர் 787 என்ற இந்த விமானத்தை வெளியிட்டுள்ளது. இந்த விமானம் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பை பெரிதும் ஏற்ப்படுத்தியது. இந்த விமானத்தர்க்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ட்ரீம்ளைனர் 787 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ட்ரீம்ளைனர் 787 விமானத்தை டிசைன் செய்து பல்வேறு நிறுவனத்திற்கு ஆர்டர்கொடுத்து விமானத்தின் பகுதிகளை உருவாக்கம் செய்து, அசெம்பல் செய்து, அதனுடைய சர்விஸ், பராமரிப்பு, விற்பனை ஆகியவற்றை (பி.சி.ஏ) போயிங் கமர்ஷியல் ஏற்ப்லைன்ஸ் கவனித்து வருகிறது. முதலில் போயிங் ட்ரீம்ளைனர் 787 2007 ஆம் ஆண்டு வெளியிடும் என தெரிவித்தது ஆனால் ஆய்வு முடியாததால் தற்போது தான் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரீம்ளைனர் 787 விமானத்தில் வழக்கத்தைவிட பெரிய ஜன்னல் கண்ணாடி, வெளிச்சத்தை குறைத்துகொள்வதற்கு எலக்ட்ரானிக் டிம்பர் வசதியும் உள்ளது, மேலும் விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளும்  போது உயரத்தால் காதுகளை அழுத்தம் ஏற்ப்படுவதை தவிர்க்கும் வகையில் பிரதேக பிரசரேஷன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் 20% எரிப்பொருள் மிச்சமாகிறது. போயிங் ட்ரீம்ளைனர் 787 அராயிச்சி பணியில் ஈடுகொண்டிருந்த போதே ஆர்டர்களும் குவிந்து கொண்டு இருந்தது. போயிங் சியாட்டில் நகரை ஒட்டியுள்ள எவரெட் தொழில் கூடத்தில் அசெம்ப்ளிங் செய்து கடந்த 2009 ஆம் ஆண்டு ட்ரீம்ளைனர் 787 வெள்ளோட்டம் விட்டது. மேலும் முறைப்படியான சோதனைகள் அனைத்தையும் முடித்து ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு முதல் விமானம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் சுமார் 330  பயணிகள் ௦௦வரை பயணம் மேற்கொள்ளலாம். இந்த ட்ரீம்ளைனர் 787 விமானத்துக்காக உலக நாடுகளில் இருந்து 827 ஆர்டர்கள் குவிந்திருகின்றன. இது ஜூன் மாதத்தின் நிலவரம். இந்த விமானத்தின் விலை ரூ 907 கோடி. இதனுடைய கூடுதல் வசதிகளை கொண்ட ட்ரீம்ளைனர் 787 ன் 9 வது மாடலின் விலை ரூ. 1,068 கோடி. நன்றி வல்டு நியுஸ் ஒன் நியுஸ் .காம்.  

0 comments:

கருத்துரையிடுக