புதன், 28 செப்டம்பர், 2011

சவுதியில் பொதுமன்னிப்பு திட்டத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் நாடு திருப்பினர்

ஏராளமான இந்தியர்கள் சவுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சிலர் கட்டுமானத் பணியிலோ அல்லது வீட்டு வேலைக்காகவோ அல்லது ஓட்டுனர் வேலைக்காகவோ செல்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல், பாஸ்போர்ட் துலைந்தும், விசாவுடைய கால அவகாசம் முடிந்தும் அங்கே தங்கி இருப்பது சமீபத்தில் அந்நாட்டு அரசுக்கு தெரிய வந்தது.
இதனை அறிந்த அந்நாட்டு அரசு சட்டப்படி அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தொழில்லாளர்கள்  வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனை அடுத்து அந்நாட்டில் விசா முடிந்தும், பாஸ்போர்ட் துலைந்தும், சரியான ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பவர்கள் அனைவரையும் பொது மன்னிப்பு திட்டத்தின்படி தாயகத்துக் திருப்பி அனுப்பி வைத்தனர். பாஸ்போர்ட் துலைந்தவர்களுக்கு சவுதியி உள்ள ரியாத் மற்றும் ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கு எமெர்ஜென்சி பாஸ்போர்ட் போன்ற பயண ஆவணங்கள் மூலம் அவர்களை அனுப்பியுள்ளனர். நடப்பு மாதம் 15 தேதிக்குள் 50 ஆயிரம் இந்தியர்களை தன் தாயகத்து அனுப்பியுள்ளனர். மேலும் சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் ஆலோசனைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் வகையில் இனையதளம் வசதிகளைக் கொண்ட தகவல் மையம் ஒன்று திறக்கப்படுள்ளதாக துரகம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நன்றி தினமணி.காம்.  

0 comments:

கருத்துரையிடுக