புதன், 28 செப்டம்பர், 2011

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 4 கோடி. மேலும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.
பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்க்கனவே அறிந்த ஒன்று. துளசி  இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் என ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்.ஜி. முரளி கிர்ஷ்ணன் தலைமையிலான மாணவர்குழு மேற்கொண்ட ஆய்வில் துளசி இலையில் உள்ள ஆசிமம் சாங்க்டம் என்ற சத்து சர்க்கரை நோயை போக்கிவிடும் என கண்டுபித்து ஆய்வு பூர்வமாக நிருபித்துள்ளனர். இந்த குழு முதலில் எலிகளை கொண்டு அதற்க்கு ஸ்ரேப்டோசிசின் என்ற ரசாயனத்தை செலுத்தி அதனுடைய சர்க்கரை அளவை அதிகபடுத்தி பின்ன இந்ததுளசி இலைகளில் கண்டு பிடித்த் மருந்தை ஒரு நாளுக்கு ஒரு முறை என 30 நாளும் செலுத்தி வந்தனர். முடிவில் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி உடல் உறுப்புகளான கிட்னி, மற்றும் லிவ்வர் பாதிக்கப்படாமல் பாத்காக்கப்பட்டதையும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். நன்றி அலைகள். காம். 

0 comments:

கருத்துரையிடுக