சனி, 1 அக்டோபர், 2011

வாட்டர் புருப் வசதியுடன் வரும் புதிய செல்போன்

பல செல்போன்களை வழங்கி வாடிகையாலர்களிடையே நற்மதிப்பை பெற்ற ஹுவேய் நிறுவனம் ஹுவேய் எக்ச்பட்டிஷன் என்ற மொபைலில் வாட்டர் புருப், டஸ்ட் புருப் மற்றும் ஷாக் புருப் வசதிகளை கொண்ட மொபைலை டிஸ்கவரி  பிராண்ட் மூலம் அறிமுக செய்யவுள்ளது.
இந்த மொபைலில் ஜி.பி.ஆர்.எஸ் வசதியும் மற்றும் நெட் வசதியையும் எளிதாகப் பெற முடியும் என்றும், இந்த மொபைளுடைய தொழில் நுட்பம் மிகவும் மேம்படுத்தப் படுவதால் வாடிக்கையாளர்களை கவரக் கூடும் என்றும், மேலும் இந்த ஹுவேய் மொபைல் தொடர்பு கொள்வதற்கு மட்டுமின்றி உலக அளவில் அங்கிகரிக்கப்பட்ட மொபைலாக இருக்க வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம் என்றும், மேலும் இந்த ஹுவேய் எக்ச்பெட்டிஷன் மொபைல் பற்றின விலைகளும் மற்றும் விவரங்களும் விரைவில் ஆன்லைனில் தெரிவிக்கப்படும் என்று ஹுவேய் நிறுவனத்தின் உயர் அதிகாரி நிக்கோலஸ் போனார்ட் தெரிவித்தார். நன்றி தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா. இன். 

0 comments:

கருத்துரையிடுக