புதன், 5 அக்டோபர், 2011

புதிய முறையில் வறுமைகோடு அளவுகோல் நிர்ணயம்


வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலயில் வறுமை கோடிற்கு கீழ் இறுப்பவர்களை நிர்ணயம் செய்வதில் சர்ச்சை ஏற்ப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் பிரமான பத்திரம் ஒன்று மத்திய திட்ட கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகர்ப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 
ரூ 4824 மற்றும் கிராம புறங்களில் நாள் ஒன்றுக்கு 5 பேர் கொண்ட  குடும்பத்திற்கு ரூ 3905 செலவளிப்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாராட்டிய மாநில பழங்குடி பெண் ஒருவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காசோலை அனுப்பி இந்த தொகைக்குள் குடும்பம் நடத்தமுடியும்மா என  தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து  கிராமபுரங்களில் சமுக பொருளாதாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாக நடைபெற்று வருகிறது என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்ர்க்குள் கணக்கெடுப்பு முடிந்துவிடும் என்று, சட்ட விதிகளுக்கு முரண் படாமல் புதிய முறை வறுமை கோடு அளவுகோல் தொடர்பான நிபுணர் குழு ஒன்று அமைக்க உள்ளது என்று திட்ட கமிஷன் உறுப்பினர்கள் தெரிவித்தனர். நன்றி மக்கள்முரசு.காம். 

0 comments:

கருத்துரையிடுக