செவ்வாய், 20 செப்டம்பர், 2011

துபாய் விமான நிலையத்தில் இ - கேட் அறிமுகம்


தற்போது துபாயில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் துபாய் விமான நிலையத்தில் இ - கேட் அறிமுகபடுத்த உள்ளது. தற்போது துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் 380 விமானங்கள் வந்து இறங்க கூடிய வசதிகளை கொண்ட பன்னாட்டு முனையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது, இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்த பின் துபாயில் மேலும் பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும் என எதிர்பர்ர்க்கப் படுகிறது.
இந்த புதிய சேவையினால் விமான நிலையத்தில் குடியுரிமை பரிசோதனைக்காக காத்திருக்கும் பணிகளின் நேரம் குறையும். மேலும் இந்த புதிய சேவையான இ - கேட் நுழைவாயில் துபாயிக்கு வருகை தரும் பயணிகளின் பாஸ்போர்ட், குடியுரிமை உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ள பாஸ்போர்ட் ஸ்கேனர், பயணிகளை சோதிக்க கேமரா , பயணிகளின் கண் கருவியை சோதிக்கும் கேமராக்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பரிசோதனைகள் மொத்தம் 14 வினாடிகளில் முடிவடையும்.

0 comments:

கருத்துரையிடுக