செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

தட்கல் முன்பதிவு கட்டணம் குறைப்பு: அக்டோபர் 1 முதல் அமலாகிறது

தட்கல் முன்பதிவுக் கட்டணங்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் குறைக்கப்படுகின்றன. ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறியதாவது:"

ஸ்லீப்பர் கோச்சு'களுக்கு 150 ரூபாயில் இருந்து 100 ஆகவும், "ஏசி' இருக்கை வசதி 150- ரூபாயில் இருந்து 75 ஆகவும், மற்ற அனைத்து "ஏசி' வகுப்புகளுக்கு 300 ல் இருந்து 200 ஆகவும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிக்கு 15 ல் இருந்து 10 ஆகவும் குறைக்கப்படுகிறது. தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு முன்பு, ரயில் புறப்படும் இடத்தில் இருந்து சென்றடையும் இடம் வரையிலான தூரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல், பயணம் செய்யும் தூரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.

இருந்தாலும், குறிப்பிட்ட அளவு தூரம் உள்ள இடங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு செல்ல இது பொருந்தாது. தட்கல் ஒதுக்கீட்டில் காலியிடம் இருக்கும் பட்சத்தில், அது பொது, ஆர்..சி., மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும். தட்கல் முன்பதிவு வசதி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தட்கல் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வதில், தற்போது உள்ள நடைமுறைகளே தொடரும். இவ்வாறு ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறினார்.



0 comments:

கருத்துரையிடுக