நரேந்திர மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரேந்திர மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 30 மார்ச், 2010
மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்து விட்டு 3 அரசு வக்கீல்களையும் விசாரித்த எஸ்.ஐ.டி.
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்த பின்னர் அவரது அரசால் நியமிக்கப்பட்ட 3 அரசு வக்கீல்களையும் எஸ்.ஐ.டி. துருவித் துருவி விசாரித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டியில் நடந்த மிகக் கொடூரமான கொலைகள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம், 2 கட்டமாக விசாரித்தது எஸ்.ஐ.டி. முதலில் பகலில் ஐந்தரை மணி நேரம் மோடியை விசாரித்த எஸ்ஐடி பின்னர் அவரை அனுப்பி வைத்தது. மீண்டும் இரவு 9 மணிக்கு மோடியை வரவழைத்த எஸ்.ஐ.டி. சுமார் நான்கரை மணி நேரம் விசாரித்தது.
Labels:
குஜராத்,
நரேந்திர மோடி
ஞாயிறு, 21 மார்ச், 2010
குஜராத் கலவர வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மோடி ஆஜராகவில்லை
குஜராத் கலவர வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்ட்ட சிறப்பு
புலனாய்வுக் குழு விசாரணைக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகவில்லை. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து
பெரும் கலவரம் வெடித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்ட
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக
குல்பர்க் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஈஷான் ஜெஃப்ரி உட்பட 70 பேர் உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்டனர்.
Labels:
நரேந்திர மோடி
வியாழன், 11 மார்ச், 2010
குஜராத் கலவர வழக்கு- விசாரணைக்கு ஆஜராக மோடிக்கு சம்மன்.
அகமதாபாத்: 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வருமாறு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) சம்மன் அனுப்பியுள்ளது.
மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மோடிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் எஸ்.ஐ.டி உத்தரவிட்டுள்ளது. குஜராத் கலவரத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை கொலை வெறியாட்டத்தைத் தூண்டி விட்டு நடத்தியதாக மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் மோடி மீதான புகார் - 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத், குல்பர்க் சொசைட்டி கலவரத்தில், முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 பேர் உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஜாப்ரியின் மனைவி ஜாகியா புகார் கொடுத்தார். அவர் தொடர்ந்த வழக்கில், மோடி மற்றும் அவரது ஆட்கள், போலீஸாரையும், அதிகாரிகளையும் ஏவி, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டு கொள்ளாமல் விடுமாறு உத்தரவிட்டனர். ஈசான், அமைதியை ஏற்படுத்தவே முயன்றார். ஆனால் அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொன்று விட்டனர் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில்தான் தற்போது மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்து மோடி மீதான புகாரை ஆராய உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து ஆர்.கே.ராகவன் அளித்த ஒரு பேட்டியில், சாட்சியங்களிடமிருந்து ஏராளமான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். முதல்வர் மோடியை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அப்போது இவற்றை அவரிடம் தெரிவித்து விளக்கம் கேட்போம் என்றார். குஜராத் கலவரத்தில் 1180 முஸ்லீம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
நரேந்திர மோடி
சனி, 6 மார்ச், 2010
நித்யானந்தாவுடன் மோடிக்கு தொடர்பு
ஆன்மீக தலைவர் என உலகம் முழுவதும் பிரபலமான சுவாமி நித்யானந்தா, பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது நித்யானந்தாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆன்மீக வேடத்தில் வலம் வந்து மக்களை ஏமாற்றிய அவரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை, கோவை, குமரி உள்ளிட்ட இடங்களில் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவையில் இந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுவாமி நித்யானந்தாவுக்கு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் இருக்கின்றன. நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகளில் வெளியானதில் இருந்து அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த பிரச்னை வட மாநிலங்களிலும் வெடித்துள்ளது. நித்யானந்தாவின் ஆசிரமத்தை முடக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் குஜராத் சட்டசபையில் «நித்யானந்தா விவகாரம் வெடித்தது. நித்யானந்தாவுக்கு அங்குள்ள வதோராவில் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு குஜராத் முதல்வர் மோடி அடிக்கடி சென்று வந்துள்ளார். பெண்கள் கல்வியை ஊக்குவிப்பதற்காக குஜராத் மாநில அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்துக்கு ரூ.2.5 லட்சம் நித்யானந்தா நிதியாக வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் மோடி பங்கேற்று நிதி பெற்றுள்ளார். மேலும் ஆசிரமத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றிலும் மோடி பங்கேற்று இருக்கிறார்.
எனவே நித்யானந்தாவுடன் மோடி நெருக்கமாக இருந்துள்ளார் என்று கூறி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசை சேர்ந்த அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டினார். இது தொட ர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் காங். குற்றச்சாட்டு
Labels:
நரேந்திர மோடி,
நித்யானந்தா
வியாழன், 27 ஆகஸ்ட், 2009
படேலை விமர்சி்க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எச்.வி.சேஷாத்ரி நூலை கண்டுகொள்ளாத மோடி
சர்தார் வல்லபாய் படேலை கேவலப்படுத்தி விட்டார் ஜஸ்வந்த் சிங் என்று கூறி ஜின்னா குறித்த அவரது நூலை வேகமாக தடை செய்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எச்.வி.சேஷாத்ரி, படேலை விமர்சித்து எழுதிய நூலை இதுவரை தடை செய்யாமல் உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சேஷாத்ரியும் தனது நூலில் பிரிவினைக்கு படேல்தான் காரணம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நூல், குஜராத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் வைத்தே விற்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயம் மோடிக்குத் தெரியாது என்று கூற முடியாது. காரணம், ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அடிக்கடி போய் வருபவர் மோடி. 1967ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ்.ஸில் பிரசாரக் ஆக இருந்தவர் மோடி. அதே கட்டட வளாகத்தில்தான் படேல் குறித்த சேஷாத்ரியின் நூலும் விற்கப்பட்டது. 1982ம் ஆண்டு இந்த நூல் வெளியானது.
The Tragic Story of Partition என்று பெயரிடப்பட்ட அந்த நூலில், நேருவையும், படேலையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் சேஷாத்ரி. இரு தலைவர்களும்தான் பிரிவினைக்குக் காரணம் என்றும் அவர் விளாசியுள்ளார். இதையேதான் தனது நூலிலும் ஜஸ்வந்த் சிங் விலாவாரியாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேஷாத்ரி எழுதிய நூலின் விலை ரூ. 100 ஆகும். இந்தப் புத்தகம் இன்று வரை ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள சாஹித்ய சாதனா அறக்கட்டளையில் விற்பனையில் உள்ளது.
இந்த நிலையில், ஜஸ்வந்த் சிங் நூலை மட்டும் தடை செய்து விட்டு சேஷாத்ரியின் நூலை கண்டு கொள்ளாமல் விட்டிருப்பதால் சட்ட சிக்கல்கள் வந்து விடக் கூடாது என்று சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மோடி ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
புத்தகத் தடையை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் விரைவில் கோர்ட்டை நாடவுள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
அப்படி அவர் கோர்ட்டுக்குப் போனார் சேஷாத்ரி நூலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை முக்கிய வாதமாக ஜஸ்வந்த் சிங் தரப்பு வைக்கக் கூடும்.
கடந்த 27 ஆண்டுகளாக சேஷாத்ரியின் நூல் குஜராத்தில் விற்பனையில் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
சேஷாத்ரியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...
1947ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அதிகார மாற்றத் திட்டம் குறித்து மெளன்ட் பேட்டன் அறிவித்தபோது அது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்தியாவை இரண்டாகப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்கும் அந்தத் திட்டத்திற்கு நேருவும், படேலும் அனுமதி அளித்திருந்தனர்.
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிஸ் கட்சியின் நம்பிக்கை வாய்ந்த தலைவர்கள் மீறி விட்டனர். இதனால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்திருந்தனர்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்தவை, நாட்டுக்கு ஆற்றப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கை மோசடியாகும். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து தங்களது இன்னுயிரை நீத்த எண்ணற்ற தேசபக்தர்களின் கனவுகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
இதயத்தில் அகண்ட பாரதம் என்ற கனவை சுமந்திருந்த அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
Labels:
நரேந்திர மோடி,
RSS
சனி, 8 ஆகஸ்ட், 2009
குஜராத்: 50000 முஸ்லீம்களுக்கு ஸ்காலர்ஷிப் மறுப்பு
குஜராத்தில் இந்த ஆண்டும் முஸ்லீம் மாணவ, மாணவியர் 50,000 பேருக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சையால் முதல்வர் நரேந்திர மோடிக்கு புதுப் பிரச்சினை உருவாகியுள்ளது.
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப் உதவியை வழங்குகிறது. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக இந்த உதவி செய்யப்படுகிறது.
இந்த ஸ்காலர்ஷிப் தொகையில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளது. ஆனால் குஜராத்தில் மட்டும், 25 சதவீத பங்கை ஏற்க முடியாது என்று மோடி அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இங்கு மட்டும் ஸ்காலர்ஷிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை முஸ்லீம் சமுதாய மாணவர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் ரூ. 22 லட்சம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் குஜராத்துக்கு மட்டும் ரூ. 57 ஆயிரத்திற்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர் அல்லது மாணவி இந்த ஸ்காலர்ஷிப் பெறத் தகுதி படைத்தவர் ஆவார். அழருக்கு ரூ. 800 முதல் ரூ. 1500 வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
கடந்த ஆண்டு இந்த ஸ்காலர்ஷிப்பை எதிர்த்து மத்திய அரசுக்கு மோடி அரசு ஒரு கடிதம் எழுதியது. அதில் இப்படி இனம் பார்த்து நிதியுதவி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசின் இந்த ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் தராமல் விட்டு விட்டது குஜராத் அரசு.
இந்த ஆண்டும் இதுவரை ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் வழங்கவில்லை மோடி அரசு. இதனால் முஸ்லீம் ஏழை, மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் உதவி கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோடி அரசின் செயல் அரசியல் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இது பிரதமரின் 15 அம்சத் திட்டங்களில் ஒன்று. சிறுபான்மையினர் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். அனைத்து மாநிலங்களும் இதை ஏற்றுள்ளபோது, குஜராத் மட்டும் எதிர்ப்பது நியாயமல்ல என்றார்
Labels:
அரசு,
குஜராத்,
தகவல்கள்,
நரேந்திர மோடி

