வியாழன், 18 மார்ச், 2010

இஸ்ரோவில் தீவிரவாதி தாக்குதல் கட்டுக்கதை - அமைச்சர்

பெங்களூரில் உள்ள `இஸ்ரோ' மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஜாதவ் என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திருப்பி சுட்டதால் அவர்கள் தப்பியோடி விட்டதாகவும் நாடு முழுவதும் தகவல் வெளியாகி பரபரப்பானது. 
ஜாதவ் மூலம்தான் இந்த தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு தாக்குதல் சம்பவமே அங்கு நடக்கவில்லை என்று கர்நாடக உள்துறை மந்திரி வி.எஸ்.ஆச்சார்யா அந்த மாநில மேல்-சபையில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து பேசிய அவர், இதுவரை நடந்துள்ள ஆரம்ப கட்ட விசாரணையில் `இஸ்ரோ' வளாக பகுதியில் மர்ம நபர்கள் யாரும் புகுந்து துப்பாக்கியால் சுட்டதாகவோ, அங்கு துப்பாக்கி சண்டை நடந்ததற்கான தடயங்களோ இல்லை என்று அப்போது அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் கூட்டாக விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களுடைய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி: இந்நேரம்

0 comments:

கருத்துரையிடுக