அவர் வேத பள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். புத்தகத்தில் பாதிரி யார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார். பாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது. முத லாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது. இந்த புத்தகம் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக