வியாழன், 6 அக்டோபர், 2011

உலகிலேயே மிக மலிவான விலையில் தொடு கணினி

உலகிலேயே தகவல் தொழில்நுட்பப துறையில் முன்னிலையில் திகழ்வதில் இந்தியா ஒன்று. நாலுக்கு நாள் புதிய கண்டுபிடிப்பு, புதிய அறிமுகம் என வளர்ந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு புதியதாய் அறிமுகமாகி  இருக்கிறது உலகிலேயே மிக மலிவான விலையில் டேப்லெட் என்ற தொடு கணினி. இந்த தொடு கணினியை டேட்டாவின்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 
பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களின் கணினி தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த தொடு கணினி இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக விற்ப்பனைக்கு வந்துவிடும். உலகிலேயே மிக மலிவான தொடு கணினியை இந்திய அரசு அறிமுகபடுத்தியது. இந்த மலிவான கணினிக்கு ஆகாஷ் என பெயரிட்டப்பட்டுள்ளது. இதனுடை அகலம் 13 சென்டிமீட்டர். இந்த தொடு கணினி ரூ 2276  செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசு அளிக்கும் மானியம் காரணமாக மாணவர்களுக்கு இந்த டேப்லெட் எனப்படும் தொடுகணினி ரூ.1500 விலையில் கிடைக்கும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த டேப்லெட் எனப்படும் தொடுகனினியை சுமார் 1 கோடி பள்ளி மாணவர்களுக்கு அளிக்க அரசுதிட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கணினியில் wifi எனப்படும் கப்பியில்லா  இனைய வசதியும் உள்ளது. இந்த wifi அன்றாயிடு இணையத்தளம் மூலம் இயங்கும் மற்றும் இணையதளத்தில் உள்ள செய்திகளை வாசித்தும் காட்டும். உலகிலேய மிக மலிவான இந்த டேப்லெட் எனப்படும் தொடு கணினியை டெல்லியில் நடந்த விழாவில் மனித மேம்பாட்டு அமைச்சர் அறிமுகபடுத்தி இந்த தொடு கணினி குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.  இந்த தொடு கணினியை இந்த அளவுக்கு குறைவாக விற்றாலும் தங்கள் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் என தேட்டாவின்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனித சிங் டூலி தெரிவித்தார். நன்றி பிபிசி.கோ.யுகே.   

0 comments:

கருத்துரையிடுக