ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
தமிழகத்திலிருந்து கூடுதல் ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு அனுமதி
தமிழகத்திற்கு கூடுதல் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது மத்தியஅரசு.
இந்த ஆண்டுக்கு, தமிழகத்திலிருந்து புனித ஹஜ் பயணத்துக்கு 2994 பேருக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், எனவே, ஹஜ் பயணத்துக்கு, கூடுதல் இடம் ஒதுக்கவேண்டும் என்று, மத்திய அரசுக்கு, முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை ஏற்று கடந்த 31ம் தேதி கூடுதலாக 399 பேருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும் தற்போது 74 பேர் செல்லவும் அனுமதித்துள்ளது. இதை இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவரான பிரசிடென்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
தட்ஸ்தமிழ்
0 comments:
கருத்துரையிடுக