வியாழன், 6 அக்டோபர், 2011

இன்னும்ன் 5 வருடத்தில் தாஜ் மஹால் இடிந்து விழும் அபாயம்

உலகில் உள்ள 7 அதிசியத்தில் ஒன்றாக திகழ்வது டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால். கடந்த 1983 ஆம் ஆண்டு உலகில் தொன்மை மிக்க வரலாற்று சின்னங்களில் ஒன்று தாஜ் மஹால் என யுனெஸ்கோ அங்கீகரித்தது. ஆண்டு தோறும் சுமார் 4 மில்லியன் மக்கள் செல்ல கூடிய சுற்று தளமான தாஜ் மஹால் சுற்று சுழல் காரணமாகவும், யமுனை நதி மாசு படுவதாலும்,
ஆக்ராவில் பெருகி வரும் தொழிற்சாலைகள் காரணமாகவும், தாஜ் மஹாலை சுற்றி உள்ள காடுகள் அழிந்து வருவதாலும் தாஜ் மஹால் பொலிவு இழந்து வருகிறது. மேலும் தொழிற்சாலையின் கழிவுகளாலும் மற்றும் யமுனை ஆற்றின் மாசுவாலும் மரத்தால் ஆனா தாஜ் மஹாலின் அடித்தளம் தொடர்ந்து அரிப்பு ஏற்ப்பட்டதால் கடந்த ஆண்டு அடித்தள பகுதியில் விரிசலும் ஏற்ப்பட்டது. இதனால் இன்னும் 5 ஆண்டுகளில் இடிந்து  விழும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளை நிறமாக உள்ள தாஜ் மஹால் தற்ப்போது மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இந்த சுற்று சூழல் மாசுவை தடுப்பதற்கு கார் மற்றும் பஸ்கள் தாஜ் மஹால் அருகில் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில்  கார் பஸ்கள் நிறுத்தப்பட்டு குதிரை வண்டி அல்லது மின்சார பஸ்கள் மூலம் தாஜ் மஹால் செல்ல வேண்டுமென புதிய முறை வசதியை ஏற்ப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி 4தமிழ்மீடியா.காம்.     

0 comments:

கருத்துரையிடுக