வியாழன், 22 செப்டம்பர், 2011

இந்த ஆண்டு தமிழகத்தில் ஹஜ் பயணம் செல்வோரின் எண்ணிக்கை 4088

நேற்று சென்னையில் ஹஜ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் முகமது ஜான் தலைமையில்  நடந்தேறியது. இந்த ஹஜ் கமிட்டி ஆலோசனை கூடத்தில் பேசிய அமைச்சர் முகமது ஜான் இந்த  ஆண்டு ஹஜ் பயனம் மேற்கொள்ள பத்தாயிரத்துக்கு மேற்ப்பட்டோர் வின்னபித்ததாகவும், இதில் இந்த ஆண்டு மத்திய அரசு கோரிக்கைப்படி தமிழக அரசு கூடுதலாக 761 பேர் ஒதுக்கீடு செய்து , மொத்தத்தில் தமிழகத்தில் மட்டும் 3818 பேர் புனித பயணமான ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இதில் ஆண்கள் 1921 பேர் பெண்கள் 1893  பேர் மற்ற 4 பேரும் மற்றும் பாண்டிசேரியில் இருந்து 59 பேரும் அந்தமானில் இருந்து 29  ஆகிய மொத்தம் 4088 பேர் சென்னையில்  இருந்து புனித பயணமான ஹஜ் பயணம் மேற்கொள்ள 14  விமானங்கள்  ஏற்பாடு செயப்பட்டுள்ளன. ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் 4088  பயனாளிகள் ஜித்தா செல்வதற்கு விமானம் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.  கூடுதலாக இருக்கும் ஹஜ் பயனாளிகளுக்கு மேலும் ஒரு விமானம் ஏற்பாடு செயப்படும் என்று நேற்று சென்னையில் நடைபெற்ற ஹஜ் கமிட்டி ஆலோசனை கூடத்தில் பேசிய அமைச்சர் முகமது ஜான் தெரிவித்தார். நன்றி தினபூமி நாளிதழ்.

0 comments:

கருத்துரையிடுக