வியாழன், 30 ஜூன், 2011

சென்னையிலிருந்து உப்பு என்ற பேரில் வெடி பொருள் கடத்தல்

அந்தமானில் சென்னையிலிருந்து கப்பல் மூலம் ஒரு கண்டைனர் அனுப்பப்பட்டது. அந்தமானை சேர்ந்த அதிகாரிகள் கண்டைனரை சோதித்ததில் அதில் வெடி மருந்து இருப்பது தெரிய வந்தது.மேலும் அந்த கண்டைனர் மேலே உப்பு என்று தவறாக குறிப்பிட்டு இருப்பது தெரியவந்தது.கண்டைனரில் உள்ள வெடி பொருள்களை அதிகாரிகள் கணகெடுத்து பார்த்த போது அதில் 60ஆயிரம் டெட்டனேட்டர்கள், 300 ஜெலட்டின் குச்சிகள், 10 ஆயிரம் கிலோ அமோனியா நைட்ரேட் வெடிபொருள் இருந்தது. 

ஹஜ் மற்றும் உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை

இஸ்லாமிய மதத்தில் 5 கடமைகளில் ஒன்றான 5 வது கடமை ஹஜ். ஒவ்வரு இஸ்லாமியர்களும் ஹஜ்குரிய நாட்களில் மக்கா, மதினா சென்று ஹஜ் யாத்திரைகளை முடித்து விட்டு வருவது தான் ஹஜ் எனப்படும். மேலும் மற்ற நாட்களில் மக்கா,மதினா செல்வது உம்ரா எனப்படும். இந்த ஹஜ் மற்றும் உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை விதிக்க சவுதி அரசுக்கு மனு ஒன்றை புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கொடுத்துள்ளது. 

சென்னையில் குழந்தையை கடத்திய 4 பேர் கைது

சென்னையில் உள்ள சைதாபேட்டை பகுதியை சேர்ந்த முரஹரி சாலையில் உள்ளவர் முருகன் இவரது மனைவி செந்தமிழ் செல்வி இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 11/2 வயதில் மணி ராஜ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 16 ஆம் தேதி வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது மணிராஜ் என்ற 11/2 வயதுடைய மகனை காணவில்லை.இதைக்குறித்து முருகன் சைதாபேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். முருகனின் புகாரின் அடிப்படையில் தனி படை போலீசார் அமைத்து குழந்தை மணி ராஜை தேடிவந்தனர்.இந்நிலையில் குழந்தை மணி ராஜ் பேரூர் மந்தவெளி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற ஆட்டோ ஓடினர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. 

பழுதூக்கும் போட்டியில் இஸ்லாமிய ஆடைக்கு தடை

அமெரிக்காவில் பளுதூக்கும் போட்டியில் சிறந்து விளங்கியவர் குல்சும் அப்துல்லாஹ் என்ற இஸ்லாமிய பெண். இவர் கம்பியுட்டர் என்ஜினீயர் பட்டதாரியான இவர் டாக்டர் பட்டமும் பெற்றவர். இவர் அமெரிக்காவில் நடந்த தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ மற்றும் 53 கிலோ பளுதூக்கும் பிரிவில் வென்ற இவர் அடுத்ததாக வரவிற்கும் தேசிய போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது அமேரிக்கா வெயிட்லிப்ட் அசோசியேஷன்.ஃபெடரேஷன் பழுதூக்கு சட்டதிட்டத்தின்படி போட்டியாளர்களின் கால் முட்டு,கை முட்டு ஆகியவற்றை காண வேண்டும் என்றும்,மேலும் போட்டியாளர்களின் கை முட்டு கால் மூட்டுகளை பார்த்து தான் அவர்கள் பளுதூகியத்தை உறுதி செய்ய முடியும்.எனவே இஸ்லாமிய ஆடை அணியும் இஸ்லாம் பெண்மணியான குல்சுமுக்கு இந்த போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றி குல்சும் கூறுகையில் போட்டியில் கலந்து கொள்வதை தடைவிதிக்கப்பட்டது நிராசை ஆகிவிட்டது என கூறியுள்ளார்.

போர்ப்ஸ்கஞ்ச்:உயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்-ஆமீனா காத்தூன்

போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன. மேலும் விபரங்களை கேட்ட பத்திரிகையாளர்களிடம் இப்பொழுதும் கிராமத்தில் போலீஸ் உள்ளது.வேறு ஏதேனும் கூறுவதற்கு பயமாக உள்ளது என மெதுவாக கூறி மகேஷ் பட்டின் அருகே அச்சம்மிகுந்து அமர்ந்திருந்தார் தாஹிருல் காத்தூன்.

துபாயின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி இந்தியா 3 மாத வர்த்தகம் ரூ2 லட்சம் கோடி

துபாயின் மிக பெரிய வர்த்தக கூட்டணி நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. மிகவும் பின்தங்கிய நிலையில் சீனா, அமெரிக்கா நாடுகள் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்துள்ளன. இதுகுறித்து துபாய் சுங்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: துபாயின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக இந்தியா உள்ளது. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியா, துபாய் இடையேயான வர்த்தகம் ஸி2 லட்சம் கோடி. உலக நாடுகளுடன் துபாயின் மொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு மட்டும் 34 சதவீதம். 

போட்டோவுடன் மார்க்ஷீட் இந்தாண்டு முதல் அமல்

தேர்வுத் துறையில் போதிய அளவில் பணியாளர் பற்றாக்குறையும் இருந்து வருவதால் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் தாயார் செய்யும் போது பல குளறுபடிகள் நடப்பது உண்டு. குறிப்பாக பிறந்த தேதி மாறுவது, பெயரின் இனிஷியல் மாறுவது, மதிப்பெண்கள் மாறுவது உள்ளிட்டவை நடப்பது வழக்கம். இவற்றை தவிர்க்க தேர்வுத் துறை கவனமாக பல ஆய்வுகளை நடத்தி மதிபெண் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு போலி மதிப்பெண் பட்டியல் நடமாடத் தொடங்கியது. அதனால் மதிப்பெண் பட்டியலில் சில ரகசிய குறியீடுகளை அச்சிட்டு தேர்வுத் துறை வழங்கியது. அத்துடன் அரசு முத்திரை அடங்கிய ஹோலோகிராமையும் மதிப்பெண் பட்டியலில் பதிப்பித்து கொடுத்தது. இவற்றை எல்லாம் மீறி போலி மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.

புதன், 29 ஜூன், 2011

இலவச லேப்டாப் வழங்க பட்டியல் தயாரிப்பு

வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பிளஸ் 1 ,பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ மானவிக்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளார்.இதை செயல்படுத்தும் விதமாக இந்த ஆண்டு முதல் கட்டமாக 9 லட்ச்சத்து 12 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக லேப்டாப் தயாரிக்கும் பல நிருவனங்கள் மாதிரி லேப்டாப் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு லேப்டாப் வடிவமைத்து அடுத்த மாத இறுதிக்குள் செயப்பட்டு தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிடும்.

தக்கலை அருகே பெட்ரோல் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

மதுரையில் இருந்து தேங்காய்பட்டணம் நோக்கி நேற்றிரவு ஒரு டேங்கர்லாரி வந்து கொண்டிருந்தது. இரவு 11 மணிக்கு தக்கலை அருகே உள்ள மணலி சந்திப்பில் அந்த லாரி வந்தபோது எதிரே விறகு பாரம் ஏற்றி கொண்டு வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் டேங்கர் லாரி ரோட்டோரமாக கவிழ்ந்தது. மேலும் டேங்கரில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டையில் இருந்து ஒழுகிய பெட்ரோல் நடுரோட்டில் ஆறாய் ஓடியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெட்ரோல் வாடை வீசியது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தக்கலை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலு வலர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்

இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களை கொலை செய்த வழக்கில் 21 வருடம் கழித்து தீர்ப்பு

கடந்த 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி பீகாரில் உள்ள நவாடா மாவட்டத்தை சேர்ந்த குலினி என்ற கிராமத்தில் ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம் இருக்கும் பகுதியில் எப்பொதும் ஊர்வலம் நடத்தாதவர்கள் அன்று மட்டும் முஸ்லிம் வாழும் பகுதியில் மசிஜித் அருகில் ஊர்வலம் செல்ல முயன்றபோது கலவரம் ஏற்ப்பட்டது. இந்த கலவரத்தால் ஹிந்துக்கள் ஆயுத்ததைக்கொண்டு முஸ்லிம் வாழும் பகுதியில் தாக்குதலை நடத்த தொடங்கினர்.மேலும் இந்த தாக்குதலின் போது நூற் ஆழம்,ஹபீஸ் மியாஹ்,பீர் மியன், சல்மான் மியான் மற்றும் வாஹீத் மியான் என்ற 5 முஸ்லிம்கள் பட்டபகலில் கொலைசெய்யப்பட்டன. பின்பு அதே கிராமத்தை சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் இக்கலவரத்தில் ஈடுப்பட்ட மொத்தம் 57 நபரை முஸ்லிம்களை கொலை செய்ததாக கைது செய்யுது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்தார். 

அஜ்மீர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் அறிவிப்பு

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் கேரளாவை சேர்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி சுரேஷ் நாயர், ரமேஷ் கொஹில், மகாத் பாயி மற்றும் பாவேஷ் பட்டேல் என்ற 4 நபரை குற்றவாளியாக என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) அறிவித்துள்ளது. மேலும் இந்த குற்றவாளிகளை கைது செய்வதற்கு போதிய தகவல் அலிப்பவர்கலூக்கு ருபாய் 2 லட்சம் பரிசு தொகையையும் அறிவித்துள்ளது. மேலும் இந்த 4 நபரை குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்ட குற்றப்பத்திரிக்கையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிம்பர் மாதம் 29 ஆம் தேதி நடந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுனில் ஜோஷி கொலை வழக்கில் மகாத் பாயி என்பவரை தேடி வருவதாகவும்,

செவ்வாய், 28 ஜூன், 2011

தமிழக அரசு கேஸ் விலை குறைகிறது

கேஸ் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் பயனாக ஜூலை 1-ம் தேதி முதல் தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீததை நீக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வரி குறைப்பு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் விலை உயர்விற்கு பின் கேஸ் சிலிண்டர் விலை ரூ 402.35 ஆக விற்கப்பட்டது தமிழக அரசு கேஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கு பிறகு கேஸ் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ 387.62 ஆக இருக்கும். இதனால் சிலிண்டர் ஒன்றிற்கு 14.73 பைசா குறைகிறது.

அரசு விரைவுப் பேருந்தில் தீ உயிர் தப்பிய 36 பயணிகள்

நேற்று மாலை சென்னையிலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று நாகர்கோவிலுக்கு 36 பயணிகளுடன் புறப்பட்டது. சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட இந்த பேருந்து இன்று அதிகாலை கோவில்பட்டி அருகே உள்ள நோட்டிலோன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்து ஒடினரான சாலமோன் ஏதோ கருகும் வாசனையை உணர்ந்துள்ளார். உடனே பேருந்து ஒடினரான சாலமன் பேருந்தை நிறுத்திவிட்டார்.பேருந்தை நிறுத்திய சாலமோன் கீழே இரங்கி பேருந்தை பார்த்த போது பேருந்தின் பின் புறம் உள்ள சக்கரங்கள் தீ பிடித்து எறிந்த நிலையில் இருதுள்ளன. 

ஜூன் 30ஆம் தேதி ஆரம்பமாகிறது மருத்துவ படிப்பிற்கான கவுன்சலிங்

வருகிற ஜூன் 30 ஆம் தேதி சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி அலுவலக வளாகத்தில் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கவுன்சுலிங் நடக்க இருக்கிறது. ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடக்க இருக்கும் இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக மாணவ,மாணவிகளுக்கு கவுன்சலிங் வருவதற்கான நேரமும், கட் ஆப் மார்க்கும் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலிங்கை குறித்து விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் கிடைக்காவிட்டால் மாணவ மாணவிகள் இணையதளத்தில் பார்த்து கவுசிளிங்கில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் குறித்து அறிவிக்கப்பட்ட 1 மணி நேரத்திற்கும் முன்னதாகவே வர வேண்டும் மற்றும் மாணவ மாணவிகளுடைய பிளஸ் 2 தேருவுக்கான மதிப்பெண் மாற்றம் இருந்தால் அதற்க்கான சரியான சான்றிதழுடன் வர வேண்டும்.

தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசா நாணயம் செல்லும்

பணவீக்கம் மற்றும் விலைவாசி காரணமாக 25 மற்றும் 50 பைசா நாணயங்களை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்றும் வருகிற 29 ஆம் தேதி முதல் 25 பைசா மற்றும் 50 பைசா செல்லாது என்று ஏற்க்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கடைக்காரர்கள் 25 பைசா மற்றும் 50 பைசாவை வாங்க மறுகிரார்கள் என பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். இதைக்குறித்து ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ஜெய பிரகாஷ் அறிவித்தாவது காசு புழக்கம் அதிகமாக தேவைப் படுவதால் தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசா செல்லும் அதனை வாங்க மறுப்பதோ செல்லாது என கூறுவதோ சட்ட படி குற்றம் என அறிவித்துள்ளார். 

திங்கள், 27 ஜூன், 2011

இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்தோனேசியாவில் உள்ள பாபுவா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்தோனேசியாவின் பாபுவா தீவில் நேற்றிரவு 9.16 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இதனால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு வந்தனர். 

பாகிஸ்தான் போலீஸ் நிலையத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட கணவன்- மனைவி

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் தற்போது தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தேரா இஸ் மாயில்கான் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று தலிபான் தீவிரவாதகிள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பின்னர் தற்கொலை தாக்குதலிலும் ஈடுபட்டனர். அதில் 12 போலீ சார் உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்கு தலில் தலிபான் தீவிரவாதி யும், அவரது மனைவியும் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் தலிபான்களின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தெரிவித்தார்.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முகமது ஜான் பதவியேற்பு

பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் பதவியேற்கிறார். வரும் புதன்கிழமை சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். மரியம்பிச்சை காலமானதால் சிறுபான்மை இனத்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் சில இலாகா மாற்றம் செய்துள்ளார்

அதிகரித்து வருகிறது சர்க்கரை நோயாளியின் எண்ணிக்கை

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைகழகத்தின் ஆராயிச்சியாளர்கள் உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி வந்தன.அவர்கள் நடத்தி வந்த இந்த ஆய்வில் உலகில் முன்பை விட சர்க்கரை நோயாளியின் எணிக்கை இரண்டு மடங்காக அதாவது முன்பு 15 .5 கோடி மட்டுமே இருந்த சர்க்கரை நோயாளியின் எண்ணிக்கை தற்போது 35 கோடியாக அதிகரித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 

ஞாயிறு, 26 ஜூன், 2011

மார்த்தாண்டம் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

களியக்காவிளையில் இருந்து மதுரைக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் காலை 9.30 மணி அளவில் மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கி ளும், பஸ்சும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 வாலி பர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிமி இயக்க முன்னாள் தலைவர் கொச்சியில் கைது.

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் முன்னாள் தலைவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் செய்யது சலாவுதீன். இவர் இந்தியாவில் சிமி இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன் அந்த அமைப்பின் தலைவராக இருந்தார். இவருக்கு எதிராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரை இந்தூர் போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த சலாவுதீன் துபாய்க்கு தப்பி ஓடினார்.

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்?

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர். தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

மின்வெட்டு நேரம் குறைப்பு

கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள்கள் கடுமையான மின்வெட்டை சந்தித்து வந்தார்கள் பல இடங்களில் அறிவிப்பு நேரங்களை தவிர் கூடுதல் நேர மின்வெட்டையும் சந்தித்துள்ளார்கள். இதனால் தொழில்களும், விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்ச்சியில் வெற்றி பெற்ற ஆ.தி.மு.க தலைவருமான முதலமைச்சருமான செல்வி ஜெயலலித்தா அவர்கள் முன்பே அறிவித்தபடி தமிழ்நாட்டில் மின் வெட்டை குறைத்து வருகிறார். அணைகள் திறக்கப்பட்டதால் நீர் மின் நிலையங்கள் செயல்பட தொடங்கி விட்டன. மேலும் காற்றலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் அதிகரித்துள்ளதால் காற்றலைகள் மூலம் மின்சாரம் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் மின்சாரம் நிருத்தபோவதில்லை மேலும் காற்றலைகள் மூலம் மின்சாரம் குறைந்தால் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும். எனவே தற்போது சென்னை தவிர மற்ற ஊருகளில் ஏற்க்கனவே நடந்த 3 மணி நேர மின் வெட்டு தற்போது 1 :30 மணி நேரமாக குறைக்கப்பட்டது.மேலும் வருகிற 1 ஆம் தேதி முதல் மின்வெட்டை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா உத்தரவுவிட்டுள்ளார். 

"ஹீனா ரப்பானி" பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்ப்பட்டது. அப்பொழுது வெளியுறவு துறை மந்திரியாக இருந்த ஷா மொகமத் குரேஷி என்பவர் நீக்கப்பட்டார். பின்னர் வெளியுறவு அமைச்சரான ஹீனா ரப்பானி என்ற 34 வயதுடைய இவர் தான் அந்த பொறுப்புகளை கவனித்து வந்திருக்கிறார்.மேலும் இவர் அரசியல் குடுபத்தின் பாரம்பரியத்தை சேர்ந்தவராகவும் இருக்கிறார். இந்நிலையில் இவரையே அந்த துரையின் கேபினெட் அமைச்சராக அமைக்க முடிவு செய்யைப்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சராக ஹீனா ரப்பானி நியமிக்கப்படவுள்ளார். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மகன் முஸ்லிம்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார்

இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நதன்யஹூ. இவரது மகன் யாயிற் நதன்யஹூ.இவர் 19 வயதுடைய ராணுவ செய்தி தொடர்பாளார். இவர் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார். மரணத்தையும், துவேஷத்தையும் கொண்டாடுபவர்கள் முஸ்லிம்கள் என்றும், தீவிரவாதத்திற்கு ஒரு மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் தான் என்றும், பாலஸ்தீனம் ஒரு போது தனி நாடாக முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். யாயிற் இந்த அவதூறு கருத்துக்களை வெளியிட்டுயிருப்பது பெறும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் இந்த அவதூறு கருத்தக்களை குறித்து பாலஸ்தீனியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

சனி, 25 ஜூன், 2011

தூத்துக்குடி காகித குடோனில் தீ விபத்து

தூத்துக்குடியில் உள்ள மார்கெட் பகுதியில் எசக்கி என்பவருக்கு சொந்தமான பழைய காகித குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோனில் இன்று அதிகாலை சுமார் 5 :30 மணியளவில் திடிரென தீபிடித்தது. காகிதத்தில் தீ பிடித்ததால் மளமள வென அங்கு உள்ள எல்லா காகித மூட்டைகளிலும் தீ பரவியது. குடோனில் உள்ள எல்லா மூட்டைகளும் கடுமையாக எரிந்தததால் அந்த பகுதியில் உள்ள பல கட்டிடங்களையும் தாண்டி தீ பிடித்து எரிந்தது பெரிதாக காட்ச்சியளிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இந்த விபத்தை குறித்து உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. 

சனி கிரகத்தில் உப்பு தண்ணீர் ஏறி

ஜெர்மனியை சேர்ந்த ஹெய் டெல் பேர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த வானவியல் விஞ்ஞானி ஆன பிராங் போஸ்ட் பேர்க் தலைமையிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு வெண்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தன. மேலும் என்செலாடஸ் சந்திரனில் ஐஸ்கட்டிகள் இருப்பதை நாசா விண்வெளி மையத்தின் காசினி வின்க்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது.அந்த ஊற்றுகள் எங்கிருந்து வருகின்றது என வானவியல் விஞ்ஞானியான பிராங் போஸ்ட் பேர்க் தலைமையிலான இந்த ஆய்வில் மேற்கொண்டனர்.

கேஸ் ரூ.50, டீசல் ரூ.3, மண்எண்ணெய் ரூ.2 அதிகரிப்பு.. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக 50 ரூபாய் உயத்தியது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் - டீஸலின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது மத்திய அரசு. பெட்ரோல் விலையை விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும் எண்ணை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நினைத்த நேரத்திலெல்லாம் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்து வருகின்றன. ஆனால் டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இவற்றின் விலை நிர்ணயம் குறித்து முடிவு எடுப்பதற்காக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

வெள்ளி, 24 ஜூன், 2011

நூதன முறையில் ரூ 45 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வந்தது. எனவே இந்த கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டிருன்தனர். இதனையொட்டி கடந்த சில தினைங்களுக்கு முன் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த இரண்டு நபர் கையும் களவுமாய் சிக்கினர். சிக்கி கொண்ட இரண்டு நபரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மேலும் நூதன முறையில் சில பேர் பெறும் வகையில் தங்கம் கடத்தி வர திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் துபாயிளுருந்து கொழும்பு வழியே சென்னை வர இருப்பதாகவும் தெரிவித்தனர். 

வியாழன், 23 ஜூன், 2011

டெல்லியில் தீ விபத்தில் 6 சிறுவர்கள் உள்பட 22 பேர் காயம்

டெல்லி கிழக்கில் உள்ள குரேஜி பகுதியில் இன்று சுமார் ஆயிரம் மீட்டர் நீளம் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பி ஒன்று குடியிருப்பு பகுதியில் அறுந்து விழுந்தது. இதில் அங்கிருந்த வீடுகள் தீப்பற்றி எரிய தொடங்கின. இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 6 சிறுவர்கள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சார வயர் அறுந்து விழுந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க் (29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது. இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க், குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கொலையை மறைக்க குழந்தையின் உடலை மைக்ரோ ஓவனுக்குள் வைத்து மறைத்து விட்டார். பிறகு போலீசில் போன் செய்து தனது குழந்தை தெரியாமல் மைக்ரோ ஓவனுக்குள் புகுந்து விட்டது. இதில், உடல் வெந்து இறந்து விட்டது என கூறினார். 

தமிழ் மொழிபெயர்ப்பு கூகுள் சேவை தொடக்கம்

தமிழ் உட்பட மேலும் 4 முக்கிய இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதியை முன்னணி இணைய தள சேவை நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், எந்த மொழியையும் மொழிபெயர்த்து படிக்க முடியும். உலகின் நம்பர் ஒன் இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது தமிழ், வங்காளம், குஜராத்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளின் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று தொடங்கியது.  இதற்கு முன் இந்தி மற்றும் உலக மொழிகள் பலவற்றுக்கு அந்த வசதியை அளித்திருந்தது. அதன் விரிவாக்கமாக இப்போது 5 மொழிகளுக்கு அந்த சேவை அளிக்கப்பட்டுள்ளது. 

புதன், 22 ஜூன், 2011

புதிய தலைமை செயலக கட்டுமான பணி: நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. புதிய தலைமை செயலக பணிகள் நிறைவடையாததால் சென்னை கோட்டையிலேயே தற்போது தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது.  கடந்த 3-ந் தேதி சட்டப்பேரவையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்றும்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், ``புதிய தலைமை செயலக கட்டிடப்பணிகளுக்கு கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை முறையாக நடைபெற ஏதுவாக புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்'' என்று அறிவித்தார். 

கே சூப்பர் கம்ப்யுட்டர்

கே சூப்பர் கம்ப்யுட்டர் .உலகிலேயே மிக அதிவேகமாக செயல் பட கூடிய கே சூப்பர் கம்ப்யுட்டரை ஜப்பான் நாடு உருவாக்கியுள்ளது. மேலும் உலகிலேயே டாப் 10 சூப்பர் கம்புயுட்டர் என்ற பட்டியலில் இந்த கே சூப்பர் கம்ப்யுட்டர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் சீன நாடு சூப்பர் கம்புயுட்டர்கள் இரண்டாம் இடத்தையும், அமெரிக்கா சூப்பர் கம்புயுட்டர்கள் ஐந்தாம் இடத்தையும், பிரான்சு நாட்டு சூப்பர் கம்புயுட்டர்கள் ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.இந்த கே சூப்பர் கம்ப்யுட்டர். இதுவரை சீன நாட்டின் சூப்பர் கம்புயுட்டர் என முன்னிலை வகித்து வந்த இடத்தில் இந்த கே சூப்பர் கம்புயுட்டர் அதன் செயல்பாட்டு திறனை விட மும்மடங்கு அதி வேக செயல் பாட்டுடன் முனிலையில் வகித்துள்ளது.

செவ்வாய், 21 ஜூன், 2011

இனி எந்தப் பெயரிலும் இணையத்தளம்!

காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது. இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும்.

இன்று சேலம்,கிரிஷ்ணகிரி மற்றும் நாமக்கல் பகுதிகளில் நிலநடுக்கம்

இன்று அதிகாலையில் சரியாக 5 :20 ௦ மணியளவில் சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் பகுதிகளில் திடிரென லேசான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2 .9 ஆக பதிவாகியுள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் உருண்டு கட்டிடங்களும் அதிர்ந்ததால் தூங்கி கொண்டிருந்த மக்கள்கள் பயந்து வீட்டை விட்டு வெளியேறினர். இதேப்போல் சேலம் மாவட்டம் அருகில் உள்ள ஆத்தூர், ஏத்தாபூர் ,உமையாள் புறம், கொட்டவாடி,பேலூர் கரடிப்பட்டி,கல்லேரிப்பட்டி உளிட்ட 20 கிராமங்களிலும் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து தெருக்களில் கூட்டம் கூட்டமாக கூடினர். இந்த நில அதிர்வால் வீடுகள் மேலே மேயப்பட்டிருந்த ஓடுகள் கீழே விளுந்ததாக் கூறப்படுகிறது. 

திங்கள், 20 ஜூன், 2011

அதிகாரிகளு​க்கு இரையான மாணவி அனுபவித்த கொடுமைகள்; தனிப்படை விசாரணையில் “திடுக்” தகவல் பிரமுகர்கள் மாயம்

கேரளா மாநிலம் எர்ணா குளத்தைச் சேர்ந்தவர் சுபீர். இவரது 14 வயது மகளை சினிமாவில் நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார். இதற்காக ஏஜெண்டுகளை சந்தித்தபோது அவர்கள் அந்த சிறுமியை விபசாரத்தில் தள்ளினர். இதில் வருமானம் கிடைத்ததால் மகள் என்றும் பாராமல் அவரது தந்தையே மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினார். கேரளாவில் முக்கிய பிரமுகர்கள், சினிமா ஏஜெண்டுகள் மற்றும் சில நடிகர்கள் ஆகியோர் அந்த 14 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்தனர். இதில் மனம் உடைந்த மாணவி தந்தையிடம் இருந்து தப்பி உறவினர் மூலம் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் தனது பரிதாப வாழ்க்கை பற்றி கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் நாளை வெளியாகிறது 30ம் தேதி கவுன்சலிங்

தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1653 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவை தவிர 10 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 800 இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பிற்கு 85 இடங்களும், 17 தனியார் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 700க்கும் மேற்பட்ட இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ளது.  2011-2012ம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 16 முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டது. மொத்தம் 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானது. விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு 10 இலக்கு ரேண்டம் எண் கடந்த 16ம் தேதி வழங்கப்பட்டது. 20765 பேருக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டது. 

ஞாயிறு, 19 ஜூன், 2011

கருணாநிதி எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து-அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி

சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் எம்.எல்.ஏ. பதவியை கருணாநிதி வீனாக்குவதால் அவர் அந்த பதவியில் இருந்து விலகிக் கொள்வதே அவருக்கு அழகு என அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி கருத்து தெரிவித்துள்ளார்.  

இது குறித்து மாநிலங்களவை முன்னாள் எம்.பி. எஸ். முத்துமணி ஒரு கட்டுரையில் கூறியுள்ளதாவது: 
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அதன் அமர்வு காலங்களில் பங்கேற்பது குறித்து விதிமுறைகள் உள்ளது. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாத கருணாநிதி சட்டமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். 

கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள இந்தியர் பட்டியல் வெளியிட சுவிஸ் முடிவு

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள இந்தியர் உட்பட வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை பெறுவது இனி சுலபம். இது தொடர்பான இரட்டை வரிவிதிப்பு சட்டத் திருத்தத்துக்கு சுவிஸ் அரசின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாத பல ஆயிரம் கோடி பணத்தை கறுப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகளும், அன்னா ஹசாரே மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

சனி, 18 ஜூன், 2011

கடைகளில் பயன்படுத்திய 47 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

குமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக்கை பை ஒழிக்க கடும் நடவடிக்ககை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 1-4-2010 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 4 நகராட்சி, 56 பேரூராட்சி, 99 கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலைதூக்க தொடங்கியது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

சவுதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்

சவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டு பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். ரியாத்தில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இருந்தும் முஸ்லிம் பெண்களின் கார் ஓட்டும் ஆர்வத்தை அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

விண்ணில் ஏவப்பட இருக்கும் 4 செயர்க்கைகோள்

நேற்று 17 .06 .2011 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்தரகிரி என்ற பகுதியில் செயிதியாலர்களிடன் பேசிய இஸ்ரோ தலைவரான கே.ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டில் 4 செயற்க்கைகோளை விண்ணில் ஏவப்பட உள்ளது என தெரிவித்தார். மேலும் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் இஸ்ரோ வடிவமைத்துள்ள ஜிசாட் -12 செயர்க்கைகோள் சி-17 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படைருகிறது. மேகா டிராபிக்ஸ் என்ற செயர்க்கைகோள் வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படும். மேலும் கடல் வளத்தை ஆயிவதர்க்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயர்க்கைகோள் வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது என்று இஸ்ரோ தலைவரான கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெள்ளி, 17 ஜூன், 2011

13 வயது முஸ்லிம் சிறுமி போலிசால் (கற்பழித்துக்) கொடூரக்கொலை

உ.பி. மாநிலத்தில், லகிம்பூர் கேரி என்ற இடத்தில் 13 வயது (சில ஊடகங்கள் 14 வயது என்கிறது) அப்பாவி சிறுபிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை (10/06/2011) அன்று போலிசாரால் காவல் நிலையத்திலேயே காட்டுமிராண்டித்தனமாக கற்பழித்து கொடூரமாக கொலை செய்த மகாபாதாக உலகை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது (தமிழ் செய்திகள் இவற்றை தவற விட்டுள்ளன). ஆடு/மாடு மேய்க்க சென்ற சோனம் என்ற 13 வயது அப்பாவி சிறுபிள்ளை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் இன்திஜாம் அலி மற்றும் தர்ரான்னும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்ற போது காவல் நிலையத்தில் உள்ள மரத்தில் அந்த சிறுபிள்ளை அவரது துப்பட்டாவால் தூக்கில் தொங்க விடப்பட்டு இருப்பது கண்டு கதறி அழுததைப்பார்த்த கருங்காலி காவல்துறையினர், உடனே பிரேதத்தை எடுத்து சென்று ஓடிவிடுமாறு கட்டளையிட்டுள்ளனர் அந்த காட்டுமிராண்டிகள்.

புதிதாக தோண்டிரிய நட்ச்சத்திரம் பேபி ஸ்டார்


ஐரோப்பிய விண்வெளி மையத்தில் உள்ள ஹெர்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி என்ற வானிலை தொலை நோக்கி இந்த புதிதாக தோண்டிரிய நட்ச்சத்திரமான பேபி ஸ்டாரை படம் பிடித்துள்ளது. இந்த பேபி நட்ச்சத்திரம் முழுமையாக உருவாகாவில்லை.இப்பொழுது உருவாகி வருகின்ற இந்த பேபி நட்ச்சத்திரத்தின் வயது 100 .000 என்றும் ,இந்த நட்ச்சத்திரம் பூமியில் இருந்து 750 ஒழி வருடத்திற்கு அப்பால் உள்ளது என்றும்,இந்த நட்ச்சத்திரத்தில் ஹைட்ரஜன் ,ஒசிஜன் சேர்ந்து தண்ணீர் உற்பத்தியாக்குகிறது என்றும் , இதனால் பேபி நட்ச்சத்திரத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு புலத்தில் இருந்து அண்டை வெளியில் மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தண்ணீர் பியிச்சு அடிக்கின்றன என்றும், நட்ச்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெட்பத்தால் தண்ணீரில் 1 .8 லட்சம் பாரன் ஹீட் அளவுக்கு சூடாக்கி வாயுவாக மாறி பின்பு நட்ச்சத்திரத்தில் இருந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியாகிறது. 

வியாழன், 16 ஜூன், 2011

நோக்கியா தொழிற்ச்சாலையில் தீ விபத்து

சென்னையில் ஸ்ரீ பெரும்புத்தூர் என்ற பகுதியில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்ச்சாலையில் பெயின்ட் பிரிவில் திடிரென காலை 11 மணியளவில் தீ பிடித்தன. தீ பிடித்தவுடன் தொழிற்ச்சாலையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வெளிஎட்ற பட்டனர். தீடிரென்று ஏற்ப்பட்ட இந்த தீயை அணைக்கும் பணியில் காஞ்சிபுரம், தாம்பரம் போன்ற இடங்களிலி இருந்து 6 க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வாகனகள் ஈடுப்பட்டிருந்தன. நடந்த இந்த தீ விபத்தில் பொருள் சேதம் பற்றியோ உயிர் சேதம் பற்றியோ தகவல் ஒன்றும் தெரியவில்லை. இந்த தீ விபத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

அதிக நேரம் டி.வி பார்ப்பது ஆபத்து

அமெரிக்காவில் உள்ள ஹார்ட்வர்டு ஸ்க்குல் ஆஃப் பப்பிளிக் ஹெல்த் நடத்திய மருத்துவ ஆராயிச்சியில் அதிக நேரம் டி.வி பார்த்தால் விரைவில் மரணம் என தெரிவித்துள்ளது. மனிதர்கள் 2 அல்லது 3 மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி பார்த்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய்,உடல் பருமன், இருதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஏற்படும் என இந்த அராயிச்சியில் தெரிவித்துள்ளது. இந்த ஹார்ட்வேர் ஸ்கூல் ஆஃப் பபிளிக் ஹெல்த் நடத்திய மருத்துவ ஆராயிச்சின் நோக்கம் மனிதர்களுக்கு உடல் உழைப்பை அதிகபடுத்த சொல்வது மட்டுமில்லாமல் டி.வி பார்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் ஏற்ப்படும் தீமைகளை எடுத்து சொல்வதும்தான். 

பெண்களுக்கு ஆபத்தான நாடு

பல நாடுகளில் பெண் சிசுகொலை,பெண்களை கொலை செய்தல்,மற்றும் பெண்களை கடத்தல் என காரியங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றன. இந்நிலையில் மகளிர் உரிமைகளுக்கான தாம்சன் ராயர்டர்சின் திருஸ்ரல்லா  விமன் என்ற அமைப்பு நடத்திய பெண்களை குறித்த ஆயுவு ஒன்றில் பெண்களுக்கு ஆபத்தான நாடு என்ற பட்டியலில் தெற்கு ஆசியாவை சேர்ந்த மூன்று நாடுகள் இடம்பெற்றுள்ளன. முதல் இடத்தை பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான் மேலும் இரண்டாம் இடத்தில் காங்கோ குடியரசு மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் நான்காம் இடத்தில் இந்தியா மற்றும் ஐந்தாம் ஆம் இடத்தில் சோமாலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

செவ்வாய், 14 ஜூன், 2011

1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த கல்வியாண்டில் தி .மு .க ஆட்ச்சின்போது சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்படிருந்தது மேலும் இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்த இருந்தது. ஆனால் ஆ.தி.மு.க ஆட்ச்சி அமைந்த போது சமச்சீர் கல்வி திட்டம் கல்வி தரத்தை உயர்த்த உதவாது என்றும் மேலும் இந்த ஆண்டு பழைய பாட புத்தகங்களை பின்பற்ற வேண்டும் என்றும் பழைய புத்தகங்களை அச்சிட அவகாசம் தேவை என்றும் கடந்த ஜூன் 1 ஆம் தேதி திறக்க இருந்த பள்ளிகூடங்களை நாளை திறக்கலாம் என்று சட்டசபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா தெரிவித்தார். 

100 பச்சிளம்குழந்தைகளை விற்ற புரோக்கர்

மதுரை மாவட்டத்தில் சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணி. இவரின் வயது 65 . இவர் ஒரு புரோக்கர். சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் பல பச்சிளம்குழந்தைகள் திருட்டு போவது அதிகரித்து வந்தது மேலும் அரசு மருத்துவமனைக்கும் வரும் வெள்ளியூர் நோயாளிகளை ஏமாற்றி தனியார் மருத்துவமனைக்கு சில புரோக்கர்கள் அழைத்து செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் மப்ட்டி உடையில் கண்காணித்து வந்தனர். இப்படி கண்காணித்து வரும்போது தான் சுடுதண்ணீர் வாய்க்காலை சேர்ந்த சுப்புரமணி புரோக்கர் அகப்பட்டார். இவருடன் மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆன அமுதவல்லியும் பிடிப்பட்டார். 

சவூதி இளவரசி மரணம்

சவூதி அரேபியா மன்னரான அபுதுல்லா. இவரின் மூத்த மகளான இளவரசி கலித் பின் அப்புதுல்லா. கலித் ஜெட்டா கால்பந்து கிளபின் தலைவராகவும்,கிங் அபுதுல்லா கலை மற்றும் தொழில்நுட்பப கல்லூரியின் நிருவனாராக இருந்த மன்னரின் மூத்த மகளான கலித் பின் அப்துல்லா கடந்த வெள்ளி கிழமை அன்று மரணம் அடைந்தார்.

திங்கள், 13 ஜூன், 2011

கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர்

காரை திருடினால் உரிமையாளரை 'அலர்ட்' செய்யும் கார்களுக்கான புதிய மொபைல்போன் சாப்ட்வேரை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆணடு முதல் இந்த புதிய சாப்ட்வேரை வால்வோ கார் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்போன்களில் இந்த புதிய சாப்ட்வேரை பதிவு செய்து கொள்ளலாம். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கார் இருக்கும் இடத்தையும், அதன் நிலையை பற்றியும மொபைல்போன் மூலம் டிரைவர் அல்லது காரின் உரிமையாளர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் சந்திரகிரகணம்: தமிழகத்தில் காணலாம்

நாளை மறுநாள் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை தமிழக மக்கள் வெறும் கண்ணால் காண முடியும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும். இந்த கிரகணங்கள் உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா சமயங்களிலும் தெரிவதில்லை. கிரகணங்களின் சுற்றுப்பாதையில் மேற்கூறிய குறுக்கீடுநேரத்தைப் பொறுத்து கிரகணங்கள் அமைவதால் இவை சில நாடுகளில் மட்டுமே தெரிகின்றன.  அத்தகைய சந்திர கிரகணம் நாளை மறுநாள்(15-ம் தேதி) ஏற்படுகிறது.